Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குதிரைவாலி அடை

தேவையானவை:

குதிரைவாலி அரிசி - 1 கப்,

துவரம் பருப்பு, கடலைப்பருப்பு - தலா ½ கப்,

கேரட் துருவல் - 1 கப்,

சிவப்பு மிளகாய் - 5,

எண்ணெய், உப்பு - தேவையான அளவு,

பெருங்காயம் - ஒரு சிட்டிகை.

செய்முறை:

அரிசி, பருப்பு களைந்து 2 மணி நேரம் ஊறவைத்து, சிவப்பு மிளகாய் வற்றல் சேர்த்து கொரகொரவென அரைக்கவும். கேரட் துருவல், உப்பு, பெருங்காயம் கலந்து தோசைக்கல்லில் ஊற்றி, எண்ணெய் ஊற்றி இருபுறமும் வெந்து எடுக்கவும். பருப்பு, கேரட் சத்துடன் உள்ள அடையை மாலை நேரம் மாணவர்களுக்கு கொடுக்கலாம்.