தேவையானவை: கேரட் - 6, பால் - 2 கப், சர்க்கரை - 1/2 கப், ஃபுட் கலர் - 1 சிட்டிகை, பொடித்த நட்ஸ் கலவை - 5 ஸ்பூன், வெனிலா எசன்ஸ் - 1/2 ஸ்பூன். செய்முறை: கேரட் தோலை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு நறுக்கிய...
தேவையானவை:
கேரட் - 6,
பால் - 2 கப்,
சர்க்கரை - 1/2 கப்,
ஃபுட் கலர் - 1 சிட்டிகை,
பொடித்த நட்ஸ் கலவை - 5 ஸ்பூன்,
வெனிலா எசன்ஸ் - 1/2 ஸ்பூன்.
செய்முறை:
கேரட் தோலை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு நறுக்கிய கேரட்டை வேக வைத்து, ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த கேரட்டுடன் சர்க்கரை சேர்த்து ஒரு அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி சூடேற்றவும். கலவை நன்கு சூடேறியதும் அதில் பாலை ஊற்றி கலந்து ஆறவிடவும். ஆறியதும் வெனிலா எசன்ஸ், ஃபுட் கலர் சேர்த்து கலந்து ஃப்ரீஸரில் வைக்கவும். அரை மணி நேரம் கழித்து எடுத்து மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றியெடுத்து கப்புகளில் ஊற்றவும். அதில் பொடித்த நட்ஸ் தூவி மீண்டும் ஃப்ரீஸரில் வைக்கவும். கேரட் ஐஸ்கிரீம் ரெடி.