தேவையான பொருட்கள்
2 கப்துருவிய முட்டைக்கோஸ்-
-1 டீஸ்பூன்துருவிய இஞ்சி பூண்டு
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்-1
-1 டீஸ்பூன்மிளகாய்த்தூள்
1/2 டீஸ்பூன்கரம் மசாலா தூள்
தேவையானஅளவு உப்பு
பொரிக்க தேவையான அளவு எண்ணெய்
-2 டீஸ்பூன்அரிசி மாவு
-2 டீஸ்பூன்கார்ன் பிளவர் மாவு
3 டீஸ்பூன்கடலைமாவு- எண்ணெய்
செய்முறை:
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். துருவிய முட்டைக்கோஸ் உடன் எடுத்து வைத்துள்ள அனைத்து பொருட்களும் வெங்காயம் பூண்டு இஞ்சி மசாலா வகைகள் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.தண்ணீர் சேர்க்க வேண்டியதில்லை.
ஒரு கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.சூடான சுவையான குட்டீஸ் விரும்பி சாப்பிடும் கேபேஜ் சில்லி பால்ஸ் ரெடி.