தேவையானவை:
பிரெட் ஸ்லைசுகள் - 5,
கோதுமை மாவு - 1 கப்,
ரவை - 1 டீஸ்பூன்,
உப்பு - ேதவைக்கேற்ப,
எண்ணெய் - 300 கிராம்.
செய்முறை:
பிரெட்டின் ஓரங்களை நீக்கி விட்டு, துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு பொடிக்கவும். அதனுடன் கோதுமை மாவு, உப்பு, ரவை, ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசைந்து வைக்கவும். பிறகு மாவை சிறிய உருண்டைகளாக்கி பூரிகளாக தயாரிக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தயாரித்துள்ள பூரிகளை போட்டு பொரித்தெடுக்கவும்.