தேவையானவை:
ஃபுல் கிரீம் பால் - 1/2 லிட்டர்,
மில்க் மெய்ட் - 1/2 டின் (ஒரு டின் 400 கிராம்),
சர்க்கரை - 5 டீஸ்பூன்,
ஓரம் நீக்கி மிக்ஸியில் பொடித்த ஸ்வீட் பிரெட் துண்டுகள் - 2,
குங்குமப் பூ - சில இதழ்கள்,
பொடித்த பாதாம், முந்திரி, பிஸ்தா எல்லாம் சேர்த்து - 3 டீஸ்பூன், உப்பு - சிட்டிகை,
ஏலக்காய் பொடி - சிறிது.
செய்முறை:
½ லிட்டர் பாலை கனமான வாணலி (அ) குக்கரில் ¼ லிட்டராக குறுக்கி பிரெட் பொடித்து சேர்த்து சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்து நன்கு கிளறி மூடி விடவும். நன்கு ஆறிய பின் மில்க் மெய்ட் சேர்த்து கலந்து மேலே பொடித்த நட்ஸ், ஏலப்பொடி சேர்த்து குளிர பரிமாறவும்.
தயாரித்த பின்னும்(அ)ஃபிரிட்ஜில் குளிரவைத்தும் பரிமாறவும்.