Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கருப்பு கவுனி அரிசி இட்லி

தேவையான பொருட்கள்

2ஆழாக்கு கருப்பு கவுனி அரிசி

1/2ஆழாக்கு உளுந்து பருப்பு

1டீஸ்பூன் வெந்தயம்

உப்பு

செய்முறை:

2 ஆழாக்கு கருப்பு கவுனி அரிசியை கழுவி 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும்.1/2 ஆழாக்கு உளுந்து பருப்பை, 1 டீஸ்பூன் வெந்தயத்துடன் கழுவி நன்கு ஊறவிடவும். கிரைண்டரில் முதலில் ஊற விட்ட உளுந்து பருப்பை நன்கு அரைத்து எடுத்து வைக்கவும். அடுத்து ஊற வைத்த கருப்பு கவுனி அரிசியை நைசாக அரைத்து எடுத்து வைக்கவும். 1/2 கைப்பிடி உப்பு சேர்த்து அரைத்த உளுந்தையும் கவுனி அரிசி மாவையும் நன்கு கலக்கி மூடி வைக்கவும். மறுநாள் மாவு சற்று புளித்தவுடன் இட்லி தட்டில் சிறிது நெய் தடவி, இட்லியாக ஊற்றி அடுப்பில் வைத்து ஆவியில் வேகவிடவும்.