தேவையான பொருட்கள்
1வில்வ பழம்
நாட்டு சர்க்கரை 2 கப்
தேன் 2 ஸ்பூன்
தண்ணீர் தேவையான அளவு
செய்முறை:
நன்கு பழுத்த வில்வ பழத்தினை இரண்டாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.ஒரு ஸ்கூப் ஸ்பூனில் வில்வ பழ ஓட்டில் ஒட்டி இருக்கும் சதையை ஸ்கூப் செய்து எடுத்துக் கொள்ளலாம்.அதை அப்படியே தண்ணீரில் சில வினாடிகள் போட்டால் விதை மற்றும் சதை கசடு மிதக்கும்.அதனை வடி கட்டி நாட்டு சர்க்கரை சேர்த்து தேவையான அளவு நீர் சேர்த்து பரிமாறும் போது தேன் கலந்து பரிமாறவும்.
