தேவையானவை :
தோல் சீவி துண்டுகளாக்கிய பறங்கிக்காய் - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பூண்டு - 4 பல்
வெள்ளரி விதைகள் - ஒரு டீஸ்பூன்
வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்
மிளகுத் தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வாணலியில் வெண்ணெய் விட்டு உருக்கி வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். அதனுடன் பறங்கித் துண்டுகள், உப்பு சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வேக விடவும். ஆறிய பிறகு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். இதை மிதமாகச் சூடு செய்து மிளகுத் தூள் தூவி இறக்கவும். மேலே வெள்ளரி விதைகள் தூவிப் பரிமாறவும்.


