Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வாழைத்தண்டு மிக்ஸட் சாலட்

தேவையானவை:

இளம் வாழைத்தண்டு நாரின்றி நறுக்கியது - 1 கப்,

வேகவிட்ட வேர்க்கடலை - 50 கிராம்,

பொடியாக நறுக்கிய கேரட், வெங்காயம், வெள்ளரி, மாங்காய் சேர்த்து - 1 கப்,

தேங்காய் துருவல் ¼ கப்,

உப்பு - தேவையான அளவு,

மல்லி, புதினா நறுக்கியது - ¼ கப்,

பொடியாக நறுக்கிய சற்றே பழமான தக்காளி - 1,

எலுமிச்சை சாறு - 1 பழம்.

தாளிக்க:

நெய் - 2 டீஸ்பூன்,

கடுகு - ¼ டீஸ்பூன்,

பச்சை மிளகாய் - 2,

மிளகாய் பொடி - ¼ டீஸ்பூன்,

பெருங்காயம் - சிறிது.

செய்முறை:

வாணலியில் நெய் சூடாக்கி தாளிக்கும் பொருட்களை கொண்டு தாளித்து ஆறவிடவும். இதர சாலட்டுக்கான பொருட்களை ஒரு பெரிய கண்ணாடி பாத்திரத்தில் சேர்த்து நன்கு கலந்து ஆறவிட்ட தாளிப்பைச் சேர்த்து பரிமாறவும்.