தேவையானவை
கோதுமை மாவு - 1 கப்
பாலக் கீரை - ஒரு கட்டு
பச்சைமிளகாய் - 2
இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப.
மசாலாவிற்கு:
வேக வைத்த
துவரம்பருப்பு - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சின்ன துண்டு
ஓமம், சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
ஆம்ச்சூர் பொடி - 1 தேக்கரண்டி
கொத்துமல்லித் தழை - கால் கப்.
செய்முறை:
கீரையை பொடியாக நறுக்கி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து வேக வைத்து மசிக்கவும். இதில் தேவையான அளவு எடுத்து, கோதுமைமாவில் சேர்த்து நன்றாக பிசைந்து வைக்கவும் வெங்காயம், பச்சைமிளகாயை பொடியாக நறுக்கவும். உள்ளே ஃப்ல்லிங் செய்ய கொடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும், வேகவைத்து மசித்த பருப்புடன் சேர்த்துக் கலக்கவும். கோதுமைமாவை சிறிய உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தியாக தேய்த்து அதன்மேல் பருப்புக் கலவையை சமமாக பரப்பி விடவும். இதை இன்னொரு சப்பாத்தியால் மூடி, ஓரங்களை ஒட்டிவிட்டு, தோசை தவாவில் சுட்டு எடுத்து, பின் பரிமாறவும்.