தேவையான பொருட்கள்
ஊறவைத்த பாதாம் - 2 மேசைக்கரண்டி
ஊறவைத்த முலாம்பழம் விதைகள் - 2 மேசைக்கரண்டி
ஊறவைத்த கசகசா விதைகள் - 1 மேசைக்கரண்டி
பாதாம் இழைகள் - ½ கப்
சர்க்கரை - ¼ கப்
குங்குமப்பூ இழைகள் - 2 பிஞ்ச்
துளசி இலைகள் - 4
பால் - 2 கப்
பச்சை ஏலக்காய்த்தூள் - ½ மேசைக் கரண்டி
கருப்பு மிளகுத்தூள் - ½ தேக்கரண்டி
ஊறவைத்த பெருஞ்சீரகம் விதைகள் - ¼ கப்.
செய்முறை
பெருஞ்சீரகம் விதைகள், பாப்பி விதைகள் மற்றும் பாதாம் ஆகியவற்றை மென்மையாக சாந்து போல செய்து கொள்ளவும். பிறகு, ஒரு கனமான பாத்திரத்தில், பாலில் குங்குமப்பூ இழைகளைப் போட்டு கொதிக்க வைத்து அதில் சர்க்கரையைக் கரைக்கவும். அதன்பின், துளசி இலைகள் மற்றும் கருப்பு மிளகுத்தூள் ஆகியவற்றை ஒரு சாந்து போல செய்து பாலில் சேர்க்கவும். பாலில் ஏலக்காய்த்தூள் மற்றும் பாதாம் இழைகளுடன் பாதாம், கசகசா விதை மற்றும் பெருஞ்சீரகம் விதை விழுது சேர்த்து 2-3 நிமிடங்கள் வேகவைத்து இறக்கிட விட வேண்டும். பிறகு, அதை ஃப்ரிட்ஜ்க்குள் வைத்து குளிர்ச்சி ஆன பிறகு பருகலாம்.


