தேவையான பொருள்கள்:
ஈரமான ஆவாரம்பூ - 1 கப்
உலர்ந்த பொடி - 2 தேக்கரண்டி
தண்ணீர்- 250 மில்லி
கேரட் - 1
பீன்ஸ்
தக்காளி - 1
வெங்காயம்
இஞ்சி
பூண்டு - 2 பல்
கொத்தமல்லி
புதினா - சிறிதளவு
மிளகுத் தூள்
சீரகத் தூள்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தண்ணீரில் ஆவாரம் பூவைக் கரைக்கவும். கேரட், பீன்ஸ், தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை பொடியாக நறுக்கி தண்ணீர்விட்டு வேகவிடவும், நன்றாக வாசனை வரும்போது, மசித்து அடுப்பை அனைத்துவிட்டு, சூடு ஆறும் முன் வடிகட்டி உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து பரிமாறவும்.


