Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நிலக்கடலை அவல் உப்புமா

தேவையான பொருட்கள்

400 கிராம் அவல்

150 கிராம் பெரிய வெங்காயம்

4 பச்சை மிளகாய்

2 டேபிள் ஸ்பூன் இஞ்சி

1/2 கப் நிலக்கடலை (வேக வைத்தது)

1/4 கப் தேங்காய் துருவல்

1/4 டீஸ்பூன் கடுகு

1 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு,

உளுந்தம் பருப்பு

1 டீஸ்பூன் மஞ்சள் தூள்

தேவையானஅளவு உப்பு

4 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

சிறிதளவு கறிவேப்பிலை

சிறிதளவு கொத்துமல்லித் தழை

1 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு.

செய்முறை

முதலில் அவலைக் கழுவி தேவையான அளவு உப்பு சேர்த்து அவல் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 10 - 15 நிமிடங்கள் ஊறவைக்கவும். அதன்பின், வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து சிவக்க வறுத்து, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நிலக்கடலை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். பின் இதனுடன் ஊறிய அவலைச் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு, எலுமிச்சைச் சாறு சேர்த்து கொத்துமல்லித்தழை சேர்த்து கலந்து இறக்கினால் சுவையும், ஆரோக்கியமும் மிகுந்த நிலக்கடலை அவல் உப்புமா தயார்.