தேவையான பொருட்கள்
3கப் பப்பாளி பழ துண்டுகள்
1½ கப் கண்டென்ஸ்ட் பால் (condensed sweetened milk)
1கப் பாதாம் +2 கப் பால்
2கப் பால்
2கப் பால் கிரீம் பவுடர்
½கப் சக்கரை (optional)
1தேக்கரண்டி வனில்லா எக்ஸ்ட்ரேக்ட் (vanilla extract)
அலங்கரிக்க
சின்ன புதினா இலை, செர்ரி பழங்கள்
2 மேஜைகரண்டி பாதாம், சாப்ட்
செய்முறை:
பப்பாளி பழ தோல் விதைகள் நீக்கி துண்டாக்குக. ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் 2கப் கொதிக்கும் நீரில் 30 நிமிடங்கள் ஊறவைக்க பின் தோல் உரிக்க. பிளென்டரில் பாலுடன் சேர்த்து கொற கொறவென்று அறைக்க. பின் அடிகனமான பாதிரத்திரக்கு மாற்றுக. பாத்திரத்தை குறைந்த நெருப்பின் மேல் வைக்க பச்சை வாசனை போகட்டும். பால் 50% சுண்டட்டும். அடிபிடிக்காமல் இருக்க லம்பஸ் வராமல் இருக்க கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கண்டேன்ஸ்ட் பால் சேர்த்து கிளற. ஆரவைக்க இதனுடன் மீதி பொருட்களை மிக்ஸி ஜாரில் சேர்த்து பிலேண்ட் செய்க -3 நிமிடங்கள். இனிப்பு அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளலாம். கலவை ருசித்து இனிப்பு அட்ஜஸ்ட் செய்க, இனிப்பு வேண்டுமானால் பொடித்த சக்கரை சேர்த்து பிலேண்ட் செய்க. இதை ஒரு காற்று புகாத மூடியுள்ள போலில் சேர்த்து லெவல் level செய்து மூடி ப்ரீஜெரில் (freezer) வைக்க. செட் ஆக 3-4 மணி நேரம் ஆகலாம். நான் ஓவெர்நைட் வைத்தேன். பரிமாறும் முன் வெளியே எடுத்து 10 நிமிடம் வைக்க. ஸ்கூப் செய்து உடனே பரிமாறுக. மேலே ஒரு சின்ன புதினா இலைகள் அல்லது செர்ரி வைத்து அலங்கரிக்க. பாதாம் பொடிகள் தூவலாம்.