தேவையான பொருட்கள்
அரை கப் கோதுமை மாவு
கால் கப் துருவிய வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை
ஒன்றரை டேபிள்ஸ்பூன் கொக்கோ பவுடர்
அரை டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
கால் டீஸ்பூன் பேக்கிங் சோடா
கால் டீஸ்பூன் உப்பு
அரைக் கப் காய்ச்சிய பால்
2டேபிள்ஸ்பூன் எண்ணெய்
அரை டீஸ்பூன் வெனிலா எசன்ஸ்
2 டேபிள் ஸ்பூன் தயிர்
பாதாம் முந்திரி அலங்கரிக்க
செய்முறை:
ஒரு சல்லடையில் கோதுமை மாவு, நாட்டு சக்கரை, கொக்கோ பவுடர், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக சலித்துக் கொள்ளவும்.சலித்த மாவுடன் பால் என்னை வெண்ணிலா எசன்ஸ் தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துவிட்டால் கேக் பேட்டர் தயார்.ஒரு ஆப்ப சட்டியில் சிறிதளவு எண்ணெய் தடவி முக்கால் குழி அளவிற்கு கேக் பேட்டரி நிரப்பி, பாதாம் முந்திரியை மேலே தூவி மூடி போட்டு பத்து நிமிடங்களுக்கு மிதமான தனலில் வேகவைக்கவும்.
பத்தே நிமிடங்களில் சுவையான கோதுமை கேக் தயார்.