ஷாஜகான்பூர்: கிறிஸ்தவ மிஷனரி குழுவுடன் தொடர்புடைய மதமாற்ற கும்பலுக்கு நிதியளித்ததாக தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் உட்பட 3 பேர் உபியில் கைது செய்யப்பட்டனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் இந்து அமைப்பு ஒன்றின் புகாரின் பேரில் சட்டவிரோத மத மாற்றத்தில் ஈடுபட்டதாக உள்ளூரை சேர்ந்த கிரண் ஜோசுவா என்பதை போலீசார் கடந்த 13ம் தேதி கைது செய்தனர்.
அவர், நோய்களை குணப்படுத்துவதாகவும் குடும்ப பிரச்னையை தீர்ப்பதாகவும் நம்பிக்கை அளித்து அதன் மூலம் பலரை மதமாற்றம் செய்ய முயன்றுள்ளார். இதற்கு தமிழ்நாடு, மும்பையில் செயல்பட்ட பல்வேறு அறக்கட்டளைகள் நிதி உதவி செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அதன்படி நிதி உதவி செய்ததாக தமிழ்நாட்டை சேர்ந்த பத்மநாபன் (45), லக்கிம்பூர் கேரியை சேர்ந்த கிரண், ஷாஜகான்பூரைச் சேர்ந்த அஷ்னீத் குமார் (25) ஆகியோரை உபி போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.