பெ.நா.பாளையம், அக்.25: கோவை கவுண்டம்பாளையம் மெயின் ரோடு கந்தசாமி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் சேகர் (48). இவர் அந்த பகுதியில் பழமுதிர் நிலையம் ஒன்று நடத்தி வருகிறார். கடைக்கு கதவுவோ, ஷட்டரோ இல்லாத நிலையில் தற்காலிகமாக இரும்பு கேட் கொண்டு பயன்படுத்தி வந்தார். கடந்த 22 ம் தேதி இரவு வியாபாரத்தை முடித்து விட்டு, கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். அடுத்த நாள் காலை வந்து பார்த்தபோது கடையின் வலதுபுறம் இருந்த பிளாஸ்டிக் தடுப்பில் பெரிய அளவில் ஓட்டை போடப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது கடையில் வைத்திருந்த 88,479 ரூபாயை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சேகர் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
+
Advertisement
