Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செட்டிநாடு காளான் மசாலா

தேவையான பொருட்கள்:

காளான் - 200 கிராம்

நறுக்கிய வெங்காயம் - 1

சீரகம் 1/2 ஸ்பூன்

எண்ணெய் 50 மில்லி

கொத்தமல்லி

அரைப்பதற்கு:

தேங்காய் துருவல் - 3 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் 10 அல்லது 15

மல்லித்தூள் - 2 ஸ்பூன்

சோம்பு - 1 ஸ்பூன்

சீரகம் - 1 ஸ்பூன்

மிளகு - 1 ஸ்பூன்

கசகசா - 1 ஸ்பூன்

ஏலக்காய் - 2

அன்னாசிப்பூ - 2

பட்டை - 2

கிராம்பு - 2

வதக்கி அரைக்க:

சின்னவெங்காயம் - 1 கப்

தக்காளி - 3

இஞ்சி - 1 துண்டு

பூண்டு - 5 பற்கள்

செய்முறை:

முதலில் தேங்காய்த் துருவலை கடாயில் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். அதன்பின் 1/2 ஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, ஆறிய பின்னர் தண்ணீர் சேர்த்து மசிய அரைக்கவும். - கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு வதக்கி ஆற வைத்து அரைக்கவும்.பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அரைத்த வெங்காய விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.- இதன் மசாலா வாசனை போனதும் அரைத்த மசாலாவை சேர்க்கவும். இந்த நிலையில் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். மசாலா நன்கு கொதித்ததும் நறுக்கிய காளானை சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து மூடி கொதிக்க விடவும்.நறுக்கிய காளான் நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் போது கொத்தமல்லி தூவி இறக்கவும்.சுவையான செட்டிநாடு காளான் கிரேவி ரெடி. இது சப்பாத்தி மற்றும் சாதத்துக்கு சிறந்த சைடிஷாக இருக்கும்!