சென்னை, டிச.2: வெளிநாட்டவர் பதிவு மண்டல அலுவலர், வெளிநாடு செல்ல முயன்ற 2 பேரின் பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தார். அப்போது வங்கதேச குடியுரிமை பெற்றதை மறைத்து ஸ்ரீவாஷ் கிருபாதாஸ் என்பவர் மலேசியா நாட்டிற்கு செல்ல முயன்றது தெரியவந்தது. அதேபோல் இலங்கை நாட்டை சேர்ந்த வலன்நியா பீட்ைரஸ் (24) என்ற பெண் போலி ஆவணங்கள் மூலம் இந்திய பாஸ்போர்ட் பெற்று இலங்ைக செல்ல முயன்றது தெரியவந்தது. உடனே 2 பேரையும் பிடித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் வெளிநாட்டவர் பதிவு மண்டல அலுவலர் ஒப்படைத்தார்.
அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திய போது வங்கதேச நாட்டில் இருந்து 2017ம் ஆண்டு சுற்றுலா விசா மூலம் இந்தியா வந்த ஷிமுல் தாஸ் (24) சட்டவிரோதமாக இந்திய பாஸ்போர்ட் பெற்றதும், இலங்கையை சேர்ந்த வலன்தியா பிடரைஸ் என்பவர் கடந்த 1984ம் ஆண்டு இலங்கையில் இருந்து சுற்றுலா விசா மூலம் இந்தியா வந்து சட்டவிரோதமாக குடியேறி இந்திய பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. அதைதொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெண் உள்பட 2 பேரையும் அதிரடியாக நேற்று முன்தினம் கைது செய்தனர்.

