வேளச்சேரி, ஆக.3: வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகர் 6வது தெருவில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மர் நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது. தகவலறிந்த வேளச்சேரி போலீசார், மின்வாரிய அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, மின் இணைப்பை துண்டித்து தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் முற்றிலும் எரிந்து நசசமானது. பின்னர், டிரான்ஸ்பார்மரை சீரமைக்கும் பணியில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வேளச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
+