புதுடெல்லி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 42வது கூட்டம் வரும் 30ம் தேதி அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதையடுத்து இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுவை மற்றும் கேரளா ஆகிய மாநில உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அன்றைய கூட்டத்தின் போது முன்னதாக ஒழுங்காற்று குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி நீர் பங்கீடு மேற்கொள்வது ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.