சப்தரிஷிகளை அறிந்து வழிபட்டால் சஞ்சலமின்றி வாழலாம்!
ரிஷி பஞ்சமி : 28-8-2025 ரிஷி பஞ்சமி என்பது ஆவணி மாத அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை பஞ்சமி நாள். பொதுவாக ஆவணி அமாவாசைக்கு அடுத்த மாதம் புரட்டாசி மாதம். இதை பாத்ரபத மாதம் என்பார்கள். அதில் ஐந்தாவது நாள் ரிஷிபஞ்சமி. இன்னொரு கோணத்தில் விநாயக சதுர்த்தி நாளுக்கு அடுத்த நாள் ரிஷி பஞ்சமி ஆகும்....
வித்தியாச விநாயகர் கோவில்களும் வழிபாடுகளும்
* விழுப்புரம் அடுத்த தீவனூரில் நெற்குத்தி விநாயகர் லிங்க வடிவில் அருள்கிறார். லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் போது விநாயகரை தரிசிக்கலாம். * ராமநாதபுரம் உப்பூரில் வெயிலுகந்த விநாயகர் அருள்கிறார். தட்சிணாயன புண்ணிய காலங்களில் இந்த விநாயகரின் தெற்குப் பகுதியிலும் உத்திராயன காலங்களில் வடக்குப் பகுதியிலும் தன்னுடைய கதிர்களை பாய்ச்சி, சூரியன் இந்த விநாயகரை வணங்குகிறார். *...
பிடித்து வைத்த ஞானமே பிள்ளையார்!
விநாயகர் என்றாலே தனக்குமேல் எந்த நாயகரும் இல்லாதவர் என்று பொருள். தனக்குமேல் எவருமில்லாத தானே அனைத்துமான பிரம்மம் அது. விநாயகர் வழிபாடு என்பது மிகமிக எளிமையானது. உலகிலேயே பார்க்கப் பார்க்க சலிக்காத விஷயங்கள் மூன்று. ஒன்று கடல், இரண்டு யானை, மூன்று குழந்தை. எனவேதான், ஆனை முகத்தோனை பார்த்துப் பார்த்து வழிபட்டு வந்தனர், முன்னோர். எங்கும்...
வினைகளை வேரறுப்பான் விநாயகப் பெருமான்
முத்துக்கள் முப்பது விநாயகர் சதுர்த்தி 27-8-2025 1. முன்னுரை நாம் ஆவலோடு எதிர்பார்த்த விநாயகர் சதுர்த்தி திருவிழா வந்துவிட்டது. குதூகலமான இந்த விழாவைக் கொண்டாடுவதற்கு நாடே தயாராகிவிட்டது. ஐந்து கரங்களை உடைய ஆனைமுகனைத் தமிழ் வருடந்தோறும் ஐந்தாவது மாதம் ஆன ஆவணி மாதம் வளர்பிறைச் சதுர்த்தி திதி அன்று கொண்டாடப்படும் விநாயக சதுர்த்தி, 27.8.2025 புதன்கிழமை...
பூஜையறையில் ஒரே ஒரு சாளக்கிராமம் போதும்! சகல தோஷங்களும் நீங்கும்!
பெரியாழ்வார் பிள்ளைத்தமிழில் ஒரு பாசுரம். முதலில் பாசுரத்தைப் பார்த்து விடுவோம். பாலைக் கறந்து அடுப்பேற வைத்துப் பல் வளையாள் என் மகளிருப்ப, மேலையகத்தே நெருப்பு வேண்டிச் சென்று இறைப் பொழுது அங்கே பேசி நின்றேன்; சாளக்கிராமமுடைய நம்பி சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான், ஆலைக்கரும்பின் மொழியனைய அசோதை நங்காய், உன் மகனைக் கூவாய்.இதன் பொருள் இனிமையானது....
புன்னகையோடு அருள்வாள் புன்னைநல்லூர் மாரியம்மன்
‘ஆற்று நீருக்கு சுவை உண்டு மண் நிலத்திற்கு சக்தி உண்டு’. என்பதற்கு ஏற்ப, புன்னைநல்லூர் கிராமத்தில் எழுந்தருளி இருக்கிறாள் அன்னை முத்துமாரியம்மன். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு சோதனை, வேதனையைத் தீர்த்து நல்லபடி வாழ்வளிக்கும் தேவியவள். சோழர் காலத்தில் கீர்த்தி சோழன் என்பவரால் சிறிய கோயிலாகக் கட்டப்பட்டது. அதன் பின்பு மராட்டிய மன்னர்களால் விரிவுப் படுத்தப்பட்டது....
அச்சரப்பாக்கம், ஆட்சீஸ்வரர்
கிரகங்களே தெய்வங்களாக பாண்டிய மன்னன் ஒருவன் சிவதல யாத்திரை சென்றபொழுது இந்த தலத்தின் அருகே அச்சு முறிந்தது. அதனால் இவ்விடத்திற்கு அச்சு + இறு + பாக்கம் என்ற பெயர் பெற்றது. அச்சு முறிந்த இடத்தில் காவலர்கள் சக்கரத்தை சரி செய்து கொண்டிருந்த போது தங்க நிறமான உடும்பு ஒன்று வந்தது. அதனை பிடிக்க மன்னன்...
நாயனார்களின் குருபூஜைகள்
புகழ்த் துணை நாயனார் குருபூஜை 22.8.2025 - வெள்ளி சிவமறையோர் திருக்குலத்தில் உதித்தவர் புகழ்த்துணையார் என்னும் சிவபக்தர். இறைவனுக்கு அன்பால் பூசித்தல், வாயால் அர்ச்சனை செய்தல், உடம்பால் வழிபாடு செய்தல், போன்ற மனம், வாக்கு, காயம் என்ற மூன்றாலும் இறைவனை வழிபட்டால் அதற்கு நிகர் வேறு சிறந்த தவம் இல்லை என்ற எண்ணம் கொண்டு தன்...
குற்றம் போக்கும் குற்றம் பொறுத்த நாதர்
ஒரு மனிதன் புரிந்த பாவங்கள் அவனை துன்புறுத்தினாலும், அவன் செய்த புண்ணியம் அவனைக் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும். அத்தகைய பாவங்களைக் கழித்து, குற்ற எண்ணங்களை நீக்கி, நல்லருள் புரியும் திருத்தலமாகத் திகழ்கிறது சு. ஆடுதுறை. பொன்னி நதியென்னும் காவிரியை விடவும் புண்ணியம் மிகுந்த நீவாநதி எனப்படும் வடவெள்ளாற்றின் தென்கரை மீது அமைந்துள்ளது இந்த ஆடுதுறை.திருஞானசம்பந்தர் தனது...