கிரிவலத்தின் வேதாந்த ரகசியத் தத்துவம்
அருணா என்கிற பார்வதி தேவி அசலமான மலையை அறுபடாத வியப்புணர்வோடு பார்த்தபடி இருந்தாள். கௌதம மகரிஷியும் அவளின் ஆச்சரியத்தையும், புத்தியால் வெல்லப்படாத மலையின் இருப்புணர்வு குறித்த விஷயத்தையும் புரிந்து கொண்டார். பார்வதி அம்மை மெல்லிய குரலில் ரிஷியை நோக்கி பேசத் தொடங்கினாள். ‘‘அருணாசலம் அக்னி ஸ்தம்பமாக அல்லவா இருந்தது.’’ பார்வதி தேவி கௌதமரை நோக்கிக் வினவினாள்....
தர்மம் தவறாத தருமன்
வாழ்க்கை, தருவதற்கும் பிடுங்கிக் கொள்வதற்கும் அனுமதி கேட்பதில்லை. ஒவ்வொரு மனிதனும் பிறப்பால் தான் உயர்ந்தவன் என்றே நினைக்கிறான். ஏழைகளைவிட பணக்காரனே செல்வத்தைப்பற்றி அதிகம் சிந்திக்கிறான். மனிதனுக்கு அரியாசணத்தை தருவதும், கையில் திருவோடு தருவதும் வாழ்க்கைதான். மனிதன் ஆதாயம் கருதியே பொய் பேசுகிறான். வியாபாரத்தில் பிழைக்கத் தெரியாதவன்தான் உண்மை வழியில் நடப்பான் என்கிறான். இந்த உலகில் கொடுக்கின்ற...
கைலாயநாதரை வழிபடும் நாகம்!
வேலூரில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அணைக்கட்டு தாலுக்கா என்னுமிடத்தில் அமைந்துள்ள கோயில் ``அருள்மிகு உமா மகேஸ்வரி உடனுறை கைலாய நாதர்’’ திருக்கோவில். இத்திருத்தலம் கிபி 10ஆம் நூற்றாண்டு, சுமார் ஆயிரம் ஆண்டு களுக்கு மேல் பழமை வாய்ந்ததாகும். தற்போது பெங்களுரில் அல்சூர் ஏரிக்கு அருகில் ஜீவசமாதி கொண்டிருக்கும் ஒடுக்கத்தூர் சுவாமிகள் என்று அழைக்கக்கூடிய சித்தர்...
ஆசைகளை கட்டுப்படுத்தும் அக்ஷோபயா தேவி
மெய் ஞானம் அடைந்தவர்கள் மனம் ஆழ் கடல் போல அமைதியாய் விளங்குவது இயல்பு. அந்த வகையில் இந்த தேவி மிக உயர்ந்த தெய்வீக அமைதியை பிரதிபலிப்பாகத் திகழ்கிறாள். அழகான பெண் உருவம் கொண்டு அமர்ந்த நிலையில் காணப் படுகிறாள். இவள் அருகே மகரம் மீன் காணப்படுகிறது. மகரம் என்றால் என்ன? மகரம் என்பது இந்து சமயத்தில்...
ஞான குரு!
பிரம்மன், திருமால், சிவன் ஆகிய முப்பெரும் கடவுள்களை உள்ளடக் கியவர் தத்தாத்ரேயர். இவரை “திருமூர்த்தி சொரூபம்” என்று அழைப்பார்கள். “தத்தாத்ரேயர்” “தத்தகுரு” அழைக்கப்படுபவர். திருமாலின் வடிவமாகவும் இவரைக் கருதுபவர்கள் உண்டு . அத்திரி முனிவருக்கும் அனுசுயாவுக்கும் மகனாகப் பிறந்தவர். கார்த்த வீரியார்ஜுனனுக்கு குரு.. இந்தியாவிலும் நேபாளத்திலும் இவர் மிகவும் அறியப்பட்ட அவதாரம். கருட புராணம், பிரம்ம...
முயலகன்
நடராசர் வடிவங்களில் அவரது ஊன்றிய திருவடியின் கீழ் மிதியுண்டவாறு கிடக்கும் பூதத்தை முயலகன் என்பர். நன்னெறியில் செல்ல முயலும் உயிர்களை, அவ்வழியில் தொடர்ந்து மேற்செல்ல வொட்டாமல் தடுக்கும் ஆணவ மலத்தின் வடிவமாக அவன் விளங்குகின்றான். அவன் இறைவன் அருளுக்கு மாறான தன்மை உடையவன். உயிர்கள் ஆணவத்தால் பிணிபட்டுப் பிறவியை எடுக்கின்றன. மேலும், தொடர்ந்து வரும் பிறவிகளிலும்...
வீட்டு விளக்கீடு
திருக்கார்த்திகையன்று தீபமேற்றி வழிபடுவது சிறப்பானதாகும். இவ்வாறு ஏற்றும் தீபத்தில் பார்வதி, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரும் இருக்கின்றனர். தீபத்தில் வெளிப்படும் சுடரில் மகாலட்சுமியும், அதன் ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதி தேவியும் இருப்பதாக ஐதீகம். எனவே திருக்கார்த்திகையன்று வீட்டில் விளக்கேற்றுவதன் மூலம் மூன்று தேவியரின் அருளையும் ஒருசேரப் பெறலாம். தீபங்களின் வகைகள் தீபங்கள் பதினாறு...
அண்ணாமலையாருக்கு அரோகரா...
முன்னுரை கார்த்திகை மாதம் அற்புதமான மாதம். தமிழ் மாதங்களில் எட்டாவதாக வருகின்ற மாதம். நாம் எட்டவேண்டிய இலக்கு எது என்பதைக் காட்டும் மாதம். வழிகாட்டும் மாதமாக இருப்பதால்தான் விளக்கு ஏற்றிக் கொண்டாடுகின்றோம். விளக்கு தானே வழிகாட்டும். அக இருள், புற இருள் இரண்டையும் நீக்கி ஆன்மிக வழியைக் காட்டும் அற்புதமான இந்த கார்த்திகை மாதத்தின் மிகச்...
திருக்கார்த்திகை நம்பிக்கைகள்
திருக்கார்த்திகை அன்று ஏற்றப்படும் தீபங்களை யார் பார்த்தாலும், ஏன் விலங்குகள் பார்த்தாலும்கூட அவர்களுக்கு நீண்ட ஆயுள் உண்டாகும் என்பது ஐதீகம்.கார்த்திகை தீபத் திருநாள் அன்று 60 வயது நிரம்பிய சுமங்கலிப் பெண்ணைக்கொண்டு தீபம் ஏற்றி, அதிலிருந்து 6 தீபங்களை சுமங்கலிப் பெண்கள் ஏற்ற வேண்டும். அவர்கள் ஏற்றும் தீபங்களில் இருந்து ஆறு, ஆறாக பசுநெய் விளக்குகளை...

