ஏமனில் ஹூத்தி பிரதமர் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹூத்தி கிளர்ச்சிக்குழு அறிவிப்பு!

ஏமனில் ஹூத்தி பிரதமர் அஹ்மத் அல்-ரஹாவி இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹூத்தி அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தலைநகர் சனாவை குறிவைத்து கடந்த ஆக.28ம் தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹூத்தி அமைப்பின் முக்கிய தலைவர்கள் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

தென்கொரியா மாஜி அதிபர் மனைவி மீது ஊழல் குற்றச்சாட்டு பதிவு

சீயோல்: தென்கொரிய அதிபராக இருந்த யூன் சுக் இயோல் கடந்தாண்டு இறுதியில் நாட்டின் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இதனால் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு பதவிநீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ, தனது கணவரின் அதிகாரத்தை பயன்படுத்தி...

பிரதமர் மோடிக்கு போதி தர்மர் பொம்மை பரிசளிப்பு

டோக்கியோ: பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். தொடர்ந்து டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றத்தில் உரையாற்றினார். அப்போது, இந்தியாவும், ஜப்பானும் இணைந்து இந்த நூற்றாண்டை நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் செழிப்பானதாக உருவாக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். தொடர்ந்து நேற்று ஜப்பான் பிரதமர் ஹிகேரு இஷிபாவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்....

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றடைந்தார் பிரதமர் மோடி..!!

பெய்ஜிங்: ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சீனா சென்றடைந்தார். 2019ம் ஆண்டுக்கு பின்னர் 7 ஆண்டுகள் கழித்து பிரதமர் நரேந்திர மோடி சீனா சென்றுள்ளார். 2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்கள் மோதலுக்கு பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார்.   ...

மொரிடேனியா நாட்டின் ஹிஜிரட் நகர் அருகே அகதிகளின் படகு கடலில் கவிழ்ந்து விபத்து 69 பேர் பலி..!!

நாவ்ஷொட்:மொரிடேனியா நாட்டின் ஹிஜிரட் நகர் அருகே அகதிகளின் படகு கடலில் கவிழ்ந்து விபத்து 69 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராம், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்து வருகின்றனர். இவர்கள் மேற்கொள்ளும் பயணம் சில...

ஜப்பானில் 320 கி.மீ. வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலில் பிரதமர் மோடி பயணம்..!!

ஜப்பான்: ஜப்பானில் 320 கி.மீ. வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலில் பிரதமர் மோடி பயணித்தார். E10 ஷின்கான்சென் புல்லட் ரயில்களை இந்தியாவில் தயாரிப்பதற்கான கூட்டாண்மையை இந்தியாவும் ஜப்பானும் எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கை அகமதாபாத்-மும்பை அதிவேக ரயில் திட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும், இதன் மொத்த நீளம் 508 கி.மீ....

ஜப்பானில் புல்லட் ரயிலில் பிரதமர் மோடி பயணம்..!!

ஜப்பான்: ஜப்பானில் 320 கி.மீ. வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலில் பிரதமர் மோடி பயணித்தார். புல்லட் ரயிலை இயக்க பயிற்சி பெற்று வரும் இந்தியர்களை சந்தித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார். ...

அதிபர் டிரம்ப் விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானவை: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

வாஷிங்டன்: அதிபர் டிரம்ப் விதித்துள்ள வரிகள் சட்டவிரோதமானவை என அமெரிக்க நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் பல்வேறு நாடுகளுக்கு அதிக வரி விதித்து வருகிறார். அந்த வகையில், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட்...

டிரம்பின் வரி விதிப்பு கட்டணங்களில் பல சட்டவிரோதமானவை: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

  வாஷிங்டன்: டிரம்பின் உலகளாவிய வரி விதிப்பு கட்டணங்களில் பல சட்டவிரோதமானவை என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்றம் "தவறாக" தீர்ப்பை வழங்கியது, "ஆனால் இறுதியில் அமெரிக்கா வெற்றி பெறும். அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் உதவியுடன்" எதிர்த்துப் போராடுவேன் என்றும் கூறினார். ...

சஸ்பெண்ட் செய்யப்பட்ட தாய்லாந்து பிரதமர் பதவி பறிப்பு: நீதிமன்றம் அதிரடி

பாங்காக்: தாய்லாந்து நாட்டில் கடந்த ஓராண்டாக பிரதமர் பதவி வகித்து வந்தவர் பேடோங்டர்ன் ஷினாவத்ரா. பெண் பிரதமரான இவர் எல்லை பிரச்னை தொடர்பாக கம்போடியா நாட்டு செனட் தலைவர் ஹன் சென்னுடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது அவரிடம் நட்பு பாராட்டிய ஷினாவத்ரா, தாய்லாந்து ராணுவ ஜெனரலை குறைகூறுவது போல் பேசியது தாய்லாந்து நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியது....