முதலமைச்சர் கோப்பை பளுதூக்குதல் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பதக்கம் வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி
சென்னை: சென்னை நேரு விளையாட்டரங்கில் நடந்த 2025 முதலமைச்சர் கோப்பை கல்லூரி மாணவர்களுக்கான பளுதூக்குதல் போட்டியில் 88 கிலோ உடல் எடை பிரிவில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பதக்கம் அணிவித்து, பரிசுத்தொகை காசோலை, சான்றிதழ் மற்றும் வீரன் நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டினார். தொடர்ந்து, முதலமைச்சர் கோப்பை கல்லூரி...
அறநிலையத்துறை கோயில்களில் பணிபுரியும் 1500 பேர் பிப்ரவரி மாதத்திற்குள் பணி நிரந்தரம்: அமைச்சர் சேகர்பாபு பேச்சு
சென்னை: தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியனின் மாநில சிறப்பு மாநாடு, சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று நடந்தது. மாநாட்டை, இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் யூனியனின் சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து,...
தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் விஞ்ஞானி பா.செந்தாமரை கண்ணன் கூறியதாவது: தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும்...
மூத்த வழக்கறிஞர் கே.பராசரனுக்கு பாராட்டு விழா நல்லவர்களை பாராட்ட தவறக்கூடாது: உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் பேச்சு
சென்னை: மத்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் கே.பராசரன் வழக்கறிஞர் தொழிலுக்கு வந்து 75 ஆண்டுகளும், மூத்த வழக்கறிஞராக உயர்வு பெற்று 50 ஆண்டுகளும் ஆனதற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த விழாவில் தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வரவேற்று பேசினார்....
வீடு தேடி பழைய பொருட்கள் சேகரிப்பு; ஒரேநாளில் 45.64 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம்: மாநகராட்சி அசத்தல்
சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாள்தோறும் சராசரியாக 6,500 மெட்ரிக் டன் திடக்கழிவுகளும், 1,000 மெட்ரிக்டன் கட்டிடம் மற்றும் கட்டுமான இடுப்பாட்டு கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் மாநகரை சுத்தமாக வைத்திடும் வகையில் சாலைகள், தெருக்கள், பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்கள், பாலங்கள் மயான பூமிகள் உள்ளிட்ட பொது...
பெசன்ட்நகர் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவன் பலி
வேளச்சேரி: பெசன்ட்நகர் கடலில் குளித்த 3 கல்லூரி மாணவர்கள் ராட்சத அலை இழுத்துச் செல்லப்பட்டனர். இதில், ஒருவர் உயிரிழந்தார், ஒருவர் மாயமானார், மற்றொருவர் உயிருக்குப் போராடி வருகிறார்.திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கவி பிரகாஷ் (21), கேரளாவை சேர்ந்த முகமது ஆதில் (21), உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரோஹித் சந்திரா (21) ஆகிய மூவரும், கோட்டூர்புரத்தில் உள்ள தனியார்...
பிரபல ரவுடி நாகேந்திரன் உடல் இன்று அடக்கம்
பெரம்பூர்: வடசென்னையை கலக்கியவர் வியாசர்பாடியை சேர்ந்த நாகேந்திரன் (55). இவர் மீது பல்வேறு கொலை, ஆள்கடத்தல் போன்ற பல வழக்குகள் உள்ளன. குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி. இவர், உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த வியாழக்கிழமை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.உயர் நீதிமன்ற உத்தரவுப்படி,...
சென்னை மாநகராட்சியில் 3,400 தெருக்களின் பெயர்களை விரைவில் மாற்ற நடவடிக்கை
சென்னை: சென்னை மாநகராட்சியில் 3,400க்கும் மேற்பட்ட தெருக்களின் பெயர்கள் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளது. தமிழ்நாடு அரசு தெருக்களில் உள்ள சாதி பெயர்களை மாற்றும் பணியை தொடங்கியுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு உத்தரவின் பேரில், சென்னை மாநகராட்சியில் 3,400க்கும் மேற்பட்ட தெருக்களின் பெயர்கள் மாற்றப்பட உள்ளன. சென்னை மாநகராட்சி, சாலை...
2021, 2022, 2023ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது; உலகம் முழுவதும் சென்று கலையை வளர்க்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை: நம்முடைய கலைஞர்கள் உலகம் முழுவதும் சென்று கலைகளை வளர்க்க வேண்டும், அரசும் அதற்கு உறுதுணையாக இருக்கும் என்று 2021, 2022, 2023ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை, கலைவாணர் அரங்கில் நேற்று தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் 2021, 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி...