திமுகவுக்கு எதிராக சிபிஐ, ஈடி, ஐடி, தேர்தல் ஆணையம் என அனைத்தையும் பயன்படுத்துவார்கள்: நமது பலத்தை துல்லியமாக பயன்படுத்தி எதிர்கொள்வோம்: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

  சென்னை: நாம்தான் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளோம். பல்வேறு சாதகமான சூழ்நிலைகள் இருந்தாலும், நம் எதிரிகளைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. சிபிஐ, ஈடி, ஐடி, தேர்தல் ஆணையம்-இவையனைத்தையும் அவர்கள் நமக்கு எதிராக பயன்படுத்துவார்கள். இவற்றை எதிர்கொள்ள, நமது பலத்தை நாம் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்....

டிச.11ல் எஸ்ஐஆர் கணக்கெடுப்பு நிறைவு: நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்: 10 மணி நேரம் நடக்கிறது

  புதுடெல்லி: வரும் 11ஆம் தேதி எஸ்ஐஆர் கணக்கெடுப்பு நிறைவடையும் நிலையில் நாடாளுமன்றத்தில் இன்று அது குறித்த விவாதம் நடக்கிறது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று இந்த விவாதம் நடக்கிறது. பீகார் மாநிலத்தை தொடர்ந்து நாடு முழுவதும் தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளை மேற்கொண்டு வருகிறது. கேரளா...

கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்த 4 குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்: வீடு, அரசு வேலை, உதவித் தொகை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்த 4 குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கமான கருத்தை பதிவு செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், பூட்டை கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் கடந்த மாதம் 14ம்தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மனைவி வசந்தி 2017ம் ஆண்டே உடல்நலக் குறைவால் காலமானார். இந்த...

சமூக நல்லிணக்கம் என்ற போர்வையில் வந்தே மாதரத்தை துண்டு துண்டாக்கியது காங். மக்களவை விவாதத்தில் பிரதமர் மோடி தாக்கு

புதுடெல்லி: ‘வந்தே மாதரம்’ தேசிய பாடலின் 150ம் ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக, மக்களவையில் வந்தே மாதரம் குறித்த விவாதம் நேற்று நடந்தது. விவாதத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: ஆங்கிலேயர் ஆட்சியில் ‘காட் சேவ் தி குயின்’ என்ற பாடலை இந்திய தேசிய கீதமாக மாற்ற பெரும் பிரசாரம் நடந்து கொண்டிருந்த சமயத்தில்,...

4500 உடைமைகளை ஒப்படைத்த இண்டிகோ: 1802 விமானங்கள் இயக்கம், 500 ரத்து

புதுடெல்லி: புதிய பணி நேர கட்டுப்பாட்டு விதிகள் அமல்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக உள்நாட்டு விமான நிறுவனமான இண்டிகோவின் விமான சேவைகள் முடங்கின. நாள்தோறும் நூற்றுக்கணக்கான விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் ஏராளமான பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பெரும் சிரமங்களுக்கு ஆளாகினார்கள். இந்நிலையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட இண்டிகோ விமான சேவையை மீட்டெடுத்து வருகின்றது....

8 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 75,343 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 26,505 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று இரவு எண்ணப்பட்டது. அதில் ரூ.3.69 கோடி கிடைத்துள்ளது. இன்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள 12 அறைகளில் பக்தர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் சுமார் 8 மணி நேரம்...

கொல்லம் அருகே கொடூரம்; கஞ்சா வாங்க பணம் கொடுக்காததால் பாட்டி கழுத்து அறுத்து கொலை: வாலிபர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே கஞ்சா வாங்க பணம் கொடுக்காததால் பாட்டியை கழுத்து அறுத்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சவரா அருகே வட்டத்தரை பகுதியை சேர்ந்தவர் சுலேகா பீவி (68). அவரது மகள் வழி பேரன் ஷஹனாஸ் (30). போதைப் பொருளுக்கு அடிமையானவர் ஆவார்....

பொள்ளாச்சி, ஆனைமலை சுற்றுவட்டார கிராமங்களில் இளநீர் உற்பத்தி அதிகரிப்பால் பண்ணை விலை ரூ.23 ஆனது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, வெளி மாவட்டங்களுக்கும். வெளி மாநிலங்களுக்கும், விற்பனைக்காக அதிகளவு இளநீர் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த ஆண்டில் தென்மேற்கு பருவமழைக்கு பிறகு சில மாதமாக மழை குறைவால் இளநீர் அறுவடை அதிகமானது. இதனால் வெளியூர்களுக்கு கனரக வாகனங்கள் மூலம் தினமும் 3.50 லட்சம் வரையிலான இளநீர் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த...

கொடைக்கானல் ஏரிசாலை நடைமேடையில் காக்கைக்கு போக்குகாட்டிய எலி

கொடைக்கானல்: மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் உணவு சங்கிலிக்காக தினம்தோறும் ஒவ்வொரு உயிரினமும் தன் இறையை தேடி அலைந்து செல்கிறது. இந்த நிலையில் இன்று ஏரிசாலை பகுதியில் நடைமேடை தெருவிளக்கின் அடியில் ஓடி சென்ற எலியை, காகம் பார்த்து இரைக்காக வேட்டையாடுவதற்கு வந்த நிலையில் மின்விளக்கு கம்பத்தின் அடியில் சென்று ஒளிந்து கொண்டது. இதில்...

நீலகிரிக்கு வலசை வர துவங்கிய வெளிநாட்டு பறவைகள்: முதன்முறையாக கிரே நெக்டு பன்டிங், பிளாக் ஹெட் பன்டிங் இனங்கள் பதிவு

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தின் காலநிலை ஐரோப்பிய நாடுகளில் காலநிலையை ஒத்துள்ளது. இதனால், ஐரோப்பிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் பேர் நீலகிரி மாவட்டத்துக்கு வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு பறவையினங்களும் நீலகிரி மாவட்டத்துக்கு வலசை வருகின்றன. குறிப்பாக நவம்பர் முதல் மார்ச் வரையிலான குளிர் காலங்களில் வெளிநாடுகளில் இருந்தும், வடமாநிலங்களில் இருந்து பல்வேறு வகை...