அதிமுக-பாஜ கூட்டணி அமலாக்கத்துறையை ஏவி விட்டு நடத்தும் அவதூறு பிரசாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்: அமைச்சர் கே.என்.நேரு அறிவிப்பு

  சென்னை: தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனம் மற்றும் ஒப்பந்தம் விட்டது தொடர்பாக ரூ.1020 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாகவும், எனவே அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தமிழக தலைமை செயலாளர் மற்றும் காவல்துறை டிஜிபிக்கு அமலாக்கத்துறை சார்பில் 288 பக்க ஆவணங்களுடன்...

ஓபிஎஸ் உடனான சந்திப்பில் அரசியல் இல்லை: அண்ணாமலை விளக்கம்

கோவை: கோவையில் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்ததில் அரசியல் எதுவும் இல்லை என அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் இருந்து பாஜ முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்றிரவு டெல்லி புறப்பட்டு சென்றார். இதற்கு முன்னதாக நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: எஸ்.ஐ.ஆர். முதல் கட்டம் கிட்டத்தட்ட முடிவிற்கு வந்துள்ளது. அது சம்மந்தமாக பாஜ...

திமுகவை வீழ்த்துவது கடினம்: டிடிவி. தினகரன் உறுதி

  திருப்பூர்: திருப்பூர் தெற்கு தொகுதி அமமுக ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. இதில், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு பேசியதாவது: கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனை திமுகவை எதிர்க்கும் அத்தனை கட்சிகளும் சுயபரிசோதனை செய்துகொண்டு, வரும் சட்ட பேரவைத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். ஏனென்றால் திமுக, கூட்டணி...

விரைவில் மெகா கூட்டணி: அன்புமணி ஆசை

  தர்மபுரி: தர்மபுரியில் நேற்று, பாமக நிர்வாகி இல்ல திருமணத்தை நடத்தி வைத்து கட்சியின் தலைவர் அன்புமணி பேசுகையில், அய்யா (ராமதாஸ்) போராட்டத்தை அறிவித்தால், கடிதம் வரும். அந்த போராட்டத்தில் 10 ஆயிரம் பேர் இருப்பார்கள். எல்லோரும் ஒன்றாக சேர்ந்து அவர் பின்னால் நின்றோம். இன்றும் அவர் பின்னால் இருக்கிறோம். நான் முதலமைச்சரானால், முதல் 2...

பல தேர்தல்களில் தோல்வி ரூ.1 கோடி கொடுத்து இபிஎஸ் 5 ஆயிரம் பேரை கூட்டினார்: செங்கோட்டையன் பேச்சு

  கோபி: ஈரோடு மாவட்டம், கோபி அருகே கரட்டுப்பாளையத்தில் தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: 1972-ல் எம்ஜிஆர் வழியில் வந்தவன் நான். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் நின்று அனைவரும் பணியாற்றினோம். ஆனால், 50 ஆண்டு காலம் உழைத்த என்னை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து...

உயிரோடு இருப்பவர் இறந்துவிட்டதாக அறிவிப்பு வாக்காளர் பட்டியலில் நாதக வேட்பாளர் நீக்கம்: சிவகங்கையில் சீமான் கட்சிக்கு வந்த சோதனை

சிவகங்கை: சிவகங்கை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர், அவரது கணவர் பெயர் வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் என நீக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் எஸ்ஐஆர் பணி நடைபெற்று வருகிறது. நிலை அலுவலர்களிடம் வழங்கிய படிவங்கள் அதற்கான செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. செயலியில் ஏற்றப்பட்ட வாக்காளர் பட்டியல்களில் இடம் பெயர்தல், இறந்தவர்கள் அடிப்படையில்...

சொல்லிட்டாங்க...

* தவெக தலைமையில் கூட்டணி அமைந்தால் என்டிஏ கூட்டணி 3வது இடத்திற்கு தள்ளப்படும் - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் * எல்லோரும் நினைக்கிறார்கள், கடலிலே என்னை தள்ளி விட்டதாக. ஆனால் நான் கப்பலில் ஏறி வந்து விட்டேன்.. என்னை சாய்க்க நினைப்பவர்கள் சாய்ந்து போவார்கள். - த.வெ.க நிர்வாகி செங்கோட்டையன் ...

எனது துறையின் சாதனைகளை மறைத்து பரப்பப்படும் அவதூறு பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்: அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை

சென்னை: எனது துறையின் சாதனைகளை மறைத்து பரப்பப்படும் அவதூறு பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். அதிமுக-பாஜக கூட்டணி அமலாக்கத்துறையை ஏவி விட்டு அவதூறு பிரச்சாரம் செய்கிறது. நாளொரு புகார், பொழுதொரு அவதூறு பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன். திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சி, அமலாக்கத்துறையின் கண்களையும் உறுத்துகிறது எனவும் தெரிவித்துள்ளார்....

திமுகவை பற்றி பேச எடப்பாடிக்கு தகுதியில்லை: ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: அனைத்து தரப்பு ஆதரவை திமுக பெற்றுள்ளதால் அமலாக்கத்துறையை வைத்து ஒன்றிய அரசு மிரட்டுகிறது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை விசாரணையை துணிச்சலாக நாங்கள் எதிர்கொள்வோம். மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயமில்லை. சம்பந்தி வீட்டில் ரெய்டு நடந்தவுடன் முகத்தை மூடிக் கொண்டு டெல்லி சென்றவர்தான் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி திமுகவை...

விரைவில் மெகா கூட்டணி சொல்கிறார் அன்புமணி

தர்மபுரி: தர்மபுரியில் இன்று நடந்த பாமக நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கட்சியின் தலைவர் அன்புமணி கலந்துகொண்டார். பின்னர் அவர் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு வருவது போல் இல்லை. வரும் 17ம் தேதி எனது தலைமையில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். இதில் பங்கேற்க அனைத்து கட்சிகள்,...