தாய்லாந்து பிரதமர் பதவி நீக்கம்
பாங்காக்: தொலைபேசி அழைப்பு கசிந்த விவகாரத்தில் தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டார். தாய்லாந்து நீதிமன்ற உத்தரவை அடுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த பிரதமர் ஷினவத்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டார். கம்போடியுடனான எல்லைப் பிரச்சினை குறித்து ராணுவ தளபதியை விமர்சித்து தாய்லாந்து பிரதமர் பேசிய ஆடியோ கசிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கம்போடிய செனட்...
வேளாங்கண்ணி மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
நாகை: உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ...
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!
டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.88.29 என்ற அளவிற்கு சரிந்து வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்தது. இந்தியா மீதான அமெரிக்காவின் 50% வரி விதிப்பு காரணமாக, ரூபாய் மதிப்பு சரிந்து வருவதாக கூறப்படுகிறது. ...
இரட்டை இலை வழக்கு - தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு
டெல்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தேர்தல் ஆணையம் பதில்தர உத்தரவிடப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற ஆணைக்கு பிறகும் முடிவெடுக்காமல் தாமதித்த ஆணையத்துக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம்...
ஆசிய கோப்பை ஹாக்கி - சீனாவை வென்றது இந்தியா
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியின் முதல் ஆட்டத்தில் சீன அணியை இந்திய அணி தோற்கடித்தது. பீகாரின் ராஜ்கிர் நகரில் நடந்த போட்டியின் 4-3 என்ற கோல் கணக்கில் இந்தியா சீனாவை வென்றது. இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் 3 கோல்கள், ஜோக்ராஜ் சிங் ஒரு கோல் அடித்து வெற்றிக்கு வித்திட்டனர் ...
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். எட்டயபுரம் அருகே அருணாச்சலபுரத்தில் உள்ள ஜாஸ்மின் பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. காட்டுத் தீ பரவி பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தீ பரவி வருவதால் யாரும்...
4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
சென்னை: நீலகிரி, தேனி, தென்காசி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்கள் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. ...
ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தின்போது மாநிலங்களின் வருவாய் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தின்போது மாநிலங்களின் வருவாய் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாநிலங்களின் வருவாயை உறுதிசெய்யாவிட்டால் ஜிஎஸ்டி சீர்திருத்தம் பயன் அளிக்காது. ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தை வரவேற்கும் அதே நேரத்தில் மாநில வருவாய் பறிபோய்விடக்கூடாது. மாநில வருவாயை கொண்டுதான் நலத்திட்டங்கள், அடிப்படை கட்டமைப்புகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் கூறியுள்ளார். ...
ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து மனு!
சென்னை: ஞானசேகரனுக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவு நீடிக்க வேண்டுமா ? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரனை குண்டாஸில் அடைத்ததை எதிர்த்து தாயார் வழக்கு தொடர்ந்திருந்தார். கொடும் குற்ற செயல்களை செய்த ஞானசேகரனால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டது - போலீஸ் தரப்பில்...