ராஜஸ்தானில் தனியார் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 19 பேர் உயிரிழப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தனியார் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் பலத்த காயம் அடைந்தனர். மேலும் 57 பேர் படுகாயம் அடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி...

தோஹா-ஹாங்காங் விமானம் அவசரமாக தரையிறக்கம்

அகமதாபாத்: தோஹாவிலிருந்து ஹாங்காங் சென்ற கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அகமதாபாத் விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அகமதாபாத் விமான நிலையத்தில் கத்தார் விமானம் பயணிகள், பணியாளர்களுடன் பத்திரமாக தரையிறங்கியது. ...

ஹரியானா ஏடிஜிபி தற்கொலை வழக்கில் புதிய திருப்பம்: மேலும் ஒரு போலீஸ் அதிகாரி தற்கொலை

  சண்டிகர்: ஹரியானா ஏடிஜிபி தற்கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. அரியானாவைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியான ஒய். பூரன் குமார், கடந்த 7ம் தேதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதி வைத்ததாகக் கூறப்படும் 8 பக்க கடிதத்தில், மாநில டி.ஜி.பி. சத்ருஜீத் கபூர், முன்னாள்...

வங்கதேசம் தலைநகர் டாகாவில் உள்ள ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

  வங்கதேசம்: வங்கதேசம் தலைநகர் டாகாவில் உள்ள ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். டாக்காவின் மிர்பூரில் உள்ள ஷியல்பாரி பகுதியில் உள்ள ஒரு ரசாயனக் கிடங்கு மற்றும் ஒரு ஆடைத் தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒருவர் காயமடைந்தார். தீயணைப்பு சேவை...

ஹரியானாவில் மேலும் ஒரு போலீஸ் அதிகாரி தற்கொலை!!

சண்டிகர்: ஹரியானாவில் தற்கொலை செய்த ஐபிஎஸ் அதிகாரி பூரண்குமார் மீதான ஊழல் புகார்களை விசாரித்து வந்த போலீஸ் அதிகாரி தற்கொலை செய்து கொண்டார். ரோடக் அருகே விவசாய நிலத்தின் நடுவே உள்ள ஒரு கட்டடத்தில் காவல் உதவி ஆய்வாளர் சந்தீப் குமாரின் சடலம் கண்டெடுக்கப்பட்டன. லதோட் என்ற கிராமத்தில் இறந்து கிடந்து உதவி எஸ்.ஐ. உடலின்...

டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

  டெல்லி: டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ED விசாரணைக்கு தடை விதிக்க மறுத்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், முகுல் ரோத்தகி ஆகியோர் தமிழ்நாடு அரசு சார்பில்...

பீகார் சட்டப்பேரவைத் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

  பாட்னா: பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. 243 தொகுதிகள் கொண்ட பீகார் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 ஆம் தேதி நடைபெறும். முதல் கட்டமாக 121 இடங்களுக்கும், இரண்டாம் கட்டமாக...

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும்: உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ED விசாரணைக்கு தடைவிதிக்க மறுத்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் தொடர்ந்த வழக்கின் விசாரணையில், EDக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பி இருந்தனர்.   ...

காலிமனைக்கு சொத்து வரி செலுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்: புதுச்சேரி உழவர்கரை நகராட்சி

புதுச்சேரி: காலிமனைக்கு சொத்து வரி செலுத்தாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி உழவர்கரை நகராட்சி தெரிவித்துள்ளது. வரி செலுத்த தவறினால் அசையும் சொத்துகள் ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.   ...

ஆந்திராவில் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைக்கும் கூகுள்: ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு

  டெல்லி: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கூகுள் நிறுவனம் பிரம்மாண்ட ஏஐ மையம் அமைக்கிறது. ரூ.1.3 லட்சம் கோடியில் மிகப்பெரிய ஏஐ மையம் அமைக்கப்படும் என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. 2026 முதல் 2030 வரை 5 ஆண்டுகளில் இத்திட்டம் படிப்படியாகச் செயல்படுத்தப்பட உள்ளது. அமெரிக்காவுக்கு வெளியே கூகுளின் மிகப்பெரிய ஏஐ மையம் ஆந்திராவில் அமைகிறது....