இரு துறைகளில் சாதித்த அறிவியல் விஞ்ஞானி

ஜெகதீஷ் சந்திரபோஸ் தாவரவியல் மற்றும் இயற்பியல் என இரு துறைகளிலும் குறிப்பிடத் தகுந்த பங்களிப்பு செய்தவர் இந்திய அறிவியல் விஞ்ஞானி ஜெகதீஷ் சந்திரபோஸ். இவர் 1858ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி வங்காள மாநிலத்தின் மைமென்சிங்கில் பெங்காலி காயஸ்தா குடும்பத்தில் பாமா சுந்தரி போஸ் மற்றும் பகவான் சந்திர போஸ் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். அவரது...

நம் எண்ணங்கள் மகத்தான சக்தி கொண்டவை!

நமது எண்ணங்கள் நம் உடலின் ரசாயன அமைப்பையே மாற்றும் வல்லமை படைத்தவை. எண்ணங்கள்தான் உணர்ச்சியாக மாறி உடலின் சக்தியாக மாறுகின்றன. மனிதனின் எண்ணம் நம்பிக்கையாக வேர்விடும்போது அசாதாரண சக்தி பெறுகிறது. அந்த சக்தி எதை சாதிக்க விரும்புகிறதோ அதை சாதிக்கிறது. எண்ணங்களை நாம் உபயோகிக்க முடியுமா? என்றால், முடியும் என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். எமிலிகூ என்கிற...

வினோத மீன்கள்

கடலில் எண்ணற்ற உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றில் மீன்கள் மட்டுமே பல்வேறு தகவமைப்புகளுடன், வினோதமான உருவமைப்புகளுடன் ஏராளமானவை வாழ்கின்றன. மீன்களின் வாழ்விடம், உடலமைப்பு, செயல்பாடுகளைக் கொண்டு வினோத மீன்களை ஒரு பட்டியலே போடலாம். அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்... கடல் சூரியமீன் (Ocean Sunfish) கடல் சூரியமீன் (Ocean Sunfish) என்று சொல்லப்படும் மோலா மோலா மீன்...

நாடு முழுவதும் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ‘ஏஐ’ பாடம் அறிமுகம்

நாடு முழுவதும் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் கணக்கீட்டுச் சிந்தனை (கம்ப்யூட்டேஷனல் திங்கிங்-சிடி) தொடர்பான பாடத்தை அறிமுகப்படுத்த மத்திய கல்வித்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் சிபிஎஸ்இ, என்சிஇஆர்டி, கேவிஎஸ், என்விஎஸ் பிரதிநிதிகள், நிபுணர்கள் பங்கேற்றனர். மேலும், ஏஐ மற்றும் சிடி பாடங்களைப் பள்ளிகளில் அறிமுகம் செய்வது தொடர்பாக ஆராய,சென்னை...

தேசியக் கல்வி தின நாயகர் அபுல்கலாம் ஆசாத்

கரும வீரர் காமராசரின் பிறந்த நாள் தமிழகத்தில் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுவதை அனைவரும் அறிவோம். இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மெளலானா அபுல்கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாள் தேசிய கல்வி நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை கடுமையாக எதிர்த்த ஆசாத் மறைந்து இன்றோடு 67 ஆண்டுகள் ஆகின்றன. சவுதி அரேபியாவின்...

விஜயாலய சோழீஸ்வரம் நார்த்தாமலை

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலை எனும் ஊர் அமைந்துள்ளது. திருச்சிராப்பள்ளி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் திருச்சிராப்பள்ளியிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. பல சிறிய மலைகளும், சிலைகள் நிறைந்த குகைகள் மற்றும் கற்றளிகளும் இப்பகுதியில் அதிகம் காணப் படுகின்றன. நார்த்தாமலையில் மேல மலை, கோட்டை மலை, கடம்பர் மலை, பறையன் மலை, உவச்சன்...

நினைவாற்றல், கற்றல் திறனை மேம்படுத்துங்கள்!

நம் கல்வி முறையைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாணவருக்கும் மிக மிக அவசியமானது கற்றல் திறன் மற்றும் நினைவாற்றல் திறனும்தான். காரணம் நமது தேர்வு முறை மனப்பாடம் செய்து எழுதும் விதமாக இருப்பதால், படித்தவை அனைத்தும் நினைவில் இருந்தால் மட்டுமே, நாம் அதிக மதிப்பெண்களைப் பெற முடியும். நம் மாணவர்களில் ஒரு சிலருக்கு இயல்பாகவே நினைவாற்றல் அதிகமாக...

ஃபேஷன் டெக்னாலஜி படிக்க NIFT-2026 நுழைவுத்தேர்வு!

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி என்பது இந்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இயங்குகின்ற கல்வி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், 1986 முதல் செயல்பட்டுவருகிறது. பெங்களூரு, போபால், சென்னை, காந்திநகர், ஹைதராபாத், கண்ணூர், கொல்கத்தா, மும்பை, நியூடெல்லி, பாட்னா, பன்ச் குலா, ரேபரேலி, ஷில்லாங், காங்ரா, ஜோத்பூர், புவனேஸ்வர், நகர் என 17 இடங்களில்...

ஜெஇஇ மெயின் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்

ஐஐடி,ஐஐஐடி,என்ஐடி உள்ளிட்ட உயர்தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் 2026ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஜெஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை தேசியத் தேர்வு முகமை (National Testing Agency - NTA) அறிவித்துள்ளது. இதுதொடர்பாகத் தேசியத் தேர்வு முகமை வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஐஐடி, ஐஐஐடி,என்ஐடி உள்ளிட்ட உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பி.இ, பி.டெக் சேர்க்கைக்கான...

பள்ளி மாணவி உருவாக்கிய புதுமையான இணையதளம்

மாணவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை அனுபவ ரீதியாக கற்க உதவும் வகையில், கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவி ரிதன்யா, ‘வைப்ரன்ஸ் ஹப்’ என்ற புதுமையான இணையதளத்தை அறிமுகப்படுத்தி உள்ளார். கோவை மணியக்காரன் பாளையத்தைச் சேர்ந்த சிவராம் என்பவரின் மகள் ரிதன்யா (17). தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும்...