இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி யானை தந்தம் பறிமுதல்: முக்கிய ஏஜென்ட் உள்பட 3 பேர் கைது

  ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே கீழக்கரை அடுத்த சிவகாமிபுரம், மீனவர் குப்பம், புதுநகர் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை மெரைன் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கீழக்கரை கடற்கரை சாலை மாதா கோயில் அருகில் சந்தேகத்திற்கிடமாக 2 பேர் நின்றிருந்தனர். அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனை...

ஓசூர் அருகே தகாத உறவை கண்டித்ததால் தொழிலாளி கத்தியால் சரமாரி குத்திக் கொலை: மனைவி, கள்ளக்காதலன் உட்பட 4 பேர் கைது

ஓசூர்: ஓசூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, கள்ளக்காதலன் உதவியுடன் கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பார்வதி நகரைச் சேர்ந்தவர் சரவணன் (25), கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி (21). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. இந்த தம்பதிக்கு மூன்றரை மற்றும்...

தனியார் மருத்துவமனை அதிகாரியுடன் நைட்ஷோ அதிமுக பிரமுகரின் மகள் கழுத்தை நெரித்துக்கொலை: பிரேதப் பரிசோதனையில் ‘திடுக்’

சேலம்: சேலம் ராமகிருஷ்ணாரோடு பகுதியை சேர்ந்தவர் பாரதி (34). திருமணமாகாதவர். இவரது தந்தை டெல்லி ஆறுமுகம். அதிமுகவை சேர்ந்த இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். பிஇ பட்டதாரியான பாரதி, சங்கர் நகர் பகுதியில் டியூஷன் சென்டரில் பணியாற்றி வந்தார். அங்கேயே தங்கிக்கொள்வார். இவரது நண்பர் நாழிக்கல்பட்டியை சேர்ந்த உதயசரண் (49). இவர்...

ஸ்ரீராம்சேனா நிர்வாகி கொலையில் 5 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை: ஓசூர் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

ஓசூர்: ஓசூரில் ஸ்ரீராம்சேனா நிர்வாகி கொலை வழக்கில், வாலிபர்கள் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஓசூர் கோர்ட் தீர்ப்பளித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா மத்திகிரி அருகே சொப்பட்டியைச் சேர்ந்தவர் திம்மராயப்பா. இவரது மகன் மோகன்பாபு (25). இன்ஜினியரிங் படித்த இவர், தனியார் நிறுவன ஊழியராக இருந்து வந்தார். மேலும், ஸ்ரீராம்சேனா (தமிழ்நாடு) என்ற...

துணை இயக்குநர் ஆபீசில் ரூ.2.52 லட்சம் சிக்கிய விவகாரம் சென்னை தீயணைப்பு வீரர் சிக்கினார்

நெல்லை: நெல்லை தீயணைப்புத்துறை மண்டல துணை இயக்குநர் சரவணபாபு அலுவலகத்தில் ​கடந்த மாதம் 18ம்தேதி லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை நடத்தி 2 லட்சத்து 52 ஆயிரத்து 400 ரூபாயை கைப்பற்றினர். அதற்கு முந்தைய நாள் நள்ளிரவில் மர்ம நபர் அலுவலகத்திற்குள் நுழைந்து பணத்தை வைத்து சென்றதற்கான சிசிடிவி ஆதாரம் சிக்கியதையடுத்து, தூத்துக்குடி...

அதிமுக மாஜி அமைச்சர் வீடு, பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

இலுப்பூர்: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே ஒரு தனியார் சிபிஎஸ்இ பள்ளிக்கு நேற்று காலை 11 மணிக்கு இமெயில் வந்தது. அதில், பள்ளியில் வைக்கப்பட்டுள்ள 6 ஆர்டிஎக்ஸ் குச்சிகள் விரைவில் வெடிக்க உள்ளது. மதியம் 2 மணிக்குள் ஊழியர்கள், மாணவர்களையும் வெளியேற்றவும். இலுப்பூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டிலும் குண்டு வெடிக்க கூடும்...

போலீஸ்காரர் கையை கடித்த தவெக தொண்டர் கைது

பாலக்கோடு: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தக்காளி மண்டி அருகே, மதுக்கடையையொட்டி தனியாருக்கு சொந்தமான பாரை அகற்றக்ேகாரி, தவெக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர்த்து, மதுக்கடை அருகே தடுப்புகளை எட்டி உதைத்து உடைக்க முயன்ற தவெகவினரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.அப்போது, தவெக தொண்டர் ஒருவர், போலீஸ்காரரின் கையை பிடித்து கடித்தார். அவரை சக...

விதிமுறை மீறி பைக் பேரணி தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு

கோபி: விதிமுறை மீறி பைக் பேரணி நடத்திய தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், நடிகர் விஜய்யின் தவெகவில் இணைந்தார். அவர் தவெக தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைவதற்காக நேற்று இரு சக்கர வாகனங்களில் கோபி-கடத்தூர் சாலையில் பேரணியாக...

கொல்லம் அருகே கொடூரம்; கஞ்சா வாங்க பணம் கொடுக்காததால் பாட்டி கழுத்து அறுத்து கொலை: வாலிபர் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் அருகே கஞ்சா வாங்க பணம் கொடுக்காததால் பாட்டியை கழுத்து அறுத்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சவரா அருகே வட்டத்தரை பகுதியை சேர்ந்தவர் சுலேகா பீவி (68). அவரது மகள் வழி பேரன் ஷஹனாஸ் (30). போதைப் பொருளுக்கு அடிமையானவர் ஆவார்....

கஞ்சா வைத்திருந்த 3 சாமியார்கள் கைது

செய்யாறு: செய்யாறு அருகே கஞ்சா வைத்திருந்த 3 சாமியார்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தனிப்பிரிவு போலீஸ்காரர் முருகன் நேற்று மாலை ஆரணி சாலை வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது வடதண்டலம் பஸ் நிறுத்தம் அருகே ருத்ராட்சம் அணிந்துகொண்டு 3 பேர் சாமியார் வேடத்தில் நின்றிருந்தனர். அவர்கள் நடத்தையில்...