மேல்முறையீட்டு மனு தள்ளுபடி; கோயில் நிதியை கல்விக்கு பயன்படுத்த தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: பக்தர்கள் மூலம் கொடுக்கப்படும் கோயில் நிதியை மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு தரப்பில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக அரசு திட்டங்களுக்கு கோயில் நிதியை பயன்படுத்தும் விதமாக அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு வந்தது. மேலும் இதுதொடர்பாக வழக்குகளும் நீதிமன்றங்களில் இருந்து வருகிறது. குறிப்பாக கோயில் நிதியில் வணிக வளாகம், கல்வி...
ஆப்கான் மீது பாக். வான்வழி தாக்குதல்: 3 பேர் பலி
காபூல்: பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சம்பவங்களில் உயிரிழப்புகளும் அரங்கேறி வருகின்றன. இதனிடையே, ஆப்கானிஸ்தான், இந்தியா போன்ற அண்டை நாடுகளே பயங்கரவாத தாக்குதலுக்கு காரணம் என்று பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது. குறிப்பாக, ஆப்கானிஸ்தான் எல்லையோர மாகாணத்தில் பாகிஸ்தான் தலிபான்கள் பயங்கரவாத...
ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக செப்டம்பர் 2ல் திமுக கூட்டணி கட்சிகள் கண்டன போராட்டம்
சென்னை: ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக செப்டம்பர் 2ல் திமுக கூட்டணி கட்சிகள் கண்டன போராட்டத்தில் ஈடுபட உள்ளது. இது தொடர்பாக திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இந்திய பொருட்கள் இறக்குமதி மீது அமெரிக்கா விதித்துள்ள 50% வரி விதிப்பால் கடும் நெருக்கடியையும், பெரும் பாதிப்பினையும் சந்தித்துள்ளது பின்னலாடை தொழிலின் மையமான திருப்பூர்....
கூட்டாட்சியை வலுப்படுத்துவது காலத்தின் கட்டாயம்: மாநில முதல்வர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு
சென்னை: அனைத்து மாநில முதலமைச்சர்கள், கட்சிகளின் மாநில தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில்; 1935-ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்திலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசமைப்பானது, ஒன்றியத்திற்கும், மாநிலங்களுக்கும் இடையில் சிறந்ததொரு அதிகார சமநிலையுடன் கூடிய கூட்டாட்சி கட்டமைப்பினை உருவாக்கியது என்றும், இருப்பினும், பல ஆண்டுகளாக இந்த சமநிலை தொடர்ந்து மாற்றப்பட்டு...
சென்னை பெசன்ட் நகர் மாதா கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
சென்னை: பெசன்ட் நகர் மாதா கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சின்ன வேளாங்கண்ணி என்று அறியப்படும் சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா கோயில், கிறிஸ்துவ மக்களின் திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாக உள்ளது. பல நூறு மக்கள் இங்கு தினமும் வந்து மாதாவை வழிப்பட்டு செல்கின்றனர். பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதாவின்...
ஹெச்1பி விசாவை கடுமையாக்க டிரம்ப் திட்டம்: அமெரிக்க இந்தியர்களுக்கு வரும் புதிய சிக்கல்
நியூயார்க்: அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப், 2வது முறையாக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். குறிப்பாக ஹெச்1பி விசா நடைமுறையில் கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த இருப்பதாக உள்நாட்டு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. புதிய திட்டத்தின்படி, அமெரிக்காவில் உயர் கல்விக்காக வரும் வெளிநாட்டு மாணவர்கள் காலவரையின்றி தங்கும் நிலைமைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால்,...
தீயணைப்பு ஆணையத் தலைவராக சங்கர் ஜிவால் நியமனம்: தமிழ்நாடு அரசு
சென்னை: தீயணைப்பு ஆணையத் தலைவராக சங்கர் ஜிவாலை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு காவல்துறை டிஜிபியாக சங்கர் ஜிவால் உள்ளார். இவரது பணிக்காலம் நாளை மறுநாள் முடிவடைகிறது. இதையடுத்து அடுத்த காவல்துறை இயக்குநர் யார்? என்பது குறித்து இழுபறி நீடித்து வந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறை நிர்வாக பிரிவு டிஜிபியாக உள்ள வெங்கட்ராமன்...
நாடு முழுவதும் வாக்கு திருட்டு: பிரேமலதா பரபரப்பு பேட்டி
நெல்லை: நாடு முழுவதும் வாக்கு திருட்டு நடைபெறுவதாக நெல்லையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறினார். நெல்லையில் இன்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நாடு முழுவதும் வாக்கு திருட்டு நடந்து கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தில் வாக்கு திருட்டு நடப்பது இப்போதுதான் தெரிய வந்துள்ளது. தேர்தலிலும் துஷ்பிரயோகம் நடக்கிறது. தேர்தல் ஆணையமும் நீதியரசர்களும் இணைந்து ஜனநாயக நாட்டில் முறையான...
சென்னையில் சிகிச்சை பெற்றுவரும் ஜி.கே. மணியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார் ராமதாஸ்
திண்டிவனம்: சென்னை வானகரம் தனியார் மருத்துவமனையில் சிசிச்சை பெற்றுவரும் கவுரவ தலைவர் ஜி.கே.மணியை தனது மூத்த மகள் காந்தியுடன் சென்று நலம் விசாரித்தார் பாமக நிறுவனர் ராமதாஸ். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே 7 மாதங்களை கடந்த நிலையிலும் அதிகார மோதல் நீடித்து வருகிறது. செயல் தலைவர் பதவியை ஏற்க மறுத்து தனி...