மாரியம்மன் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு பெரணமல்லூர்அருகே
பெரணமல்லூர், ஆக.30: பெரணமல்லூர் அருகே நடந்த மாரியம்மன் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பெரணமல்லூர் அடுத்த கொழப்பலூர் கிராமத்தில் பிரசித்திபெற்ற பனையம்மன், மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 5ம்தேதி மாரியம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது. தொடர்ந்து விழாவில் பல்வேறு அலங்காரத்தில் அம்மன் இரவில்...
நிலுவை வரிகளை நாளைக்குள் செலுத்தாவிட்டால் கடைகளுக்கு சீல் செங்கம் நகராட்சி உத்தரவு
செங்கம், ஆக.30: நிலுவை வரிகளை நாளைக்குள் செலுத்தாவிட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என செங்கம் நகராட்சி உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகராட்சி கடந்த 3மாதங்களுக்கு முன்பு தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சிக்கு சொந்தமான புதிய பஸ் நிலையம் மற்றும் பழைய பஸ் நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் வணிக வளாகங்கள், கடைகள் உள்ளது. இங்கு கடை...
காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை தண்டராம்பட்டு அருகே சோகம் பெற்றோர் எதிர்ப்பால் விபரீதம்
தண்டராம்பட்டு, ஆக.29: தண்டராம்பட்டு அருகே பெற்றோர் எதிர்ப்பால் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த ராயண்டபுரம் ஊராட்சியை சேர்ந்தவர் மணி மகன் மோகன்(26). கூலி வேலை செய்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த பிச்சைக்காரன் மகள் பவானி(24) என்பவரும் பல...
நாட்டுத்துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது வனவிலங்குகளை வேட்டையாட
கலசப்பாக்கம், ஆக.29: பர்வதமலை அடிவாரத்தில் உள்ள வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத்துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்தவரை வனத்துறையினர் கைது செய்தனர். கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் கிராமத்தில் பர்வதமலையில் சிவன் கோயில் உள்ளது. இப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுவது மற்றும் விலை மதிப்பில்லாத மூலிகைகளை தீயிட்டு கொளுத்தும் சம்பவங்களில் சமூக விரோதிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில்...
கல்குவாரி குட்டையில் மூழ்கி சாமியார் பலி அழுகிய நிலையில் சடலம் மீட்பு திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே
திருவண்ணாமலை, ஆக.29: திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி சாமியார் பலியானார். அழுகிய நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது. திருவண்ணாமலை கிரிவலப்பாதை அடி அண்ணாமலை பகுதியில் உள்ள கல்குவாரி குட்டையில் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் நிரம்பி உள்ளது. கல்குவாரி குட்டையில் தேங்கி இருந்த தண்ணீரில் அழுகிய நிலையில் ஆண் சடலம் நேற்று மிதந்தது....
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் பூஜைப் பொருட்கள் விற்பனை அமோகம் கடை வீதிகளில் கூட்டம் அலைமோதியது திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று
திருவண்ணாமலை, ஆக. 27: திருவண்ணாமலை மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, மாவட்டம் முழுவதும் கூடுதல் ேபாலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற விநாயகர் சதுர்த்தி விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, பிரமாண்ட வடிவிலான விதவிதமான விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் விநாயகர்...
தேசிய மக்கள் நீதிமன்றம் அடுத்த மாதம் 13ம் தேதி நடக்கிறது திருவண்ணாமலை மாவட்டத்தில்
திருவண்ணாமலை, ஆக. 27: திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் அடுத்த மாதம் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் (ேலாக் அதாலத்) நடைபெற உள்ளது. இது குறித்து, திருவண்ணாமலை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி பி.மதுசூதனன் தெரிவித்திருப்பதாவது: தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தலின்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள...
இருதரப்பு மோதலில் 4 பேர் மீது வழக்கு பெரணமல்லூர் அருகே
பெரணமல்லூர், ஆக. 27: பெரணமல்லூர் அடுத்த கொழப்பலூர் பகுதியைச் சேர்ந்த எல்லம்மாள். இவர் கடந்த 24ம் தேதி தனது வீட்டு அருகில் நின்று கொண்டிருந்தபோது அப்போது அதே பகுதி சேர்ந்த வாசுதேவன் மற்றும் அவரது நண்பர் செல்வம் ஆகியோர் பைக்கில் மோதுவது போல் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் எல்லம்மாள் அந்த நபர்களை ஏன் இப்படி வருகிறார்...
விநாயகர் சதுர்த்தி விழா கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் ஆய்வுக் கூட்டத்தில் கலெக்டர் தகவல் திருவண்ணாமலை மாவட்டத்தில்
திருவண்ணாமலை, ஆக.23: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என ஆய்வுக் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார். திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில், வரும் 27ம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமையில் நேற்று நடந்தது. எஸ்பி சுதாகர், டிஆர்ஓ ராம்பிரதீபன்,...