பேக்கரியில் தீ விபத்து

திருப்பூர், ஆக.30: கோவையை சேர்ந்தவர் சரவணன் (43), இவர் திருப்பூர் காந்தி நகரில் பேக்கரி நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை வழக்கம் போல் பேக்கரி திறந்து வியாபாரத்தை தொடங்கினர். அப்போது பேக்கரியில் டீ பாய்லரில் தண்ணீர் சூட வைத்துள்ளனர். இதனை மறந்து டீ மாஸ்டர் குளிக்க சென்றதாக தெரிகிறது. அந்த நேரத்தில் திடீரென தீ பற்றியது....

சிக்கண்ணா கல்லூரியில் காய்கறி விதை கிட் வினியோகம்

திருப்பூர், ஆக.30: தமிழ்நாடு தோட்டக்கலை-மலைப்பயிர்கள் துறை திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 ஆகியவை சார்பில் கல்லூரி வளாகத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தின்கீழ் பழ மரக்கன்றுகள் மற்றும் காய்கறி விதைத்தொகுப்புகள் வழங்கும் நிகழ்வு நடந்தது. இதில், அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். பேராசிரியர் விநாயகமூர்த்தி துவக்கி வைத்தார். தோட்டக்கலை உதவி...

தெற்கு தொகுதியில் கூடுதலாக 44 வாக்குச்சாவடிகள் அமைப்பு

திருப்பூர், ஆக. 30: திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வருகிற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 1200 வாக்காளர்களுக்கு மேல் இருக்கிற வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சியினர் பங்கேற்ற...

பைக் மோதி முதியவர் பலி

திருப்பூர், ஆக.29: திருப்பூர் அவிநாசிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆதீஸ்வரன் (80). இவர் நேற்று முன் தினம் இரவு திருச்சி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது பின்னால் வந்த பைக் ஆதீஸ்வரன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்ற ஆதீஸ்வரன்...

திருப்பூரில் சாரல் மழை

திருப்பூர், ஆக.29: திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இதன் காரணமாக, பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென சாரல் மழை பெய்ய தொடங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் பலரும் மழையில் நனைந்தபடி சென்றனர். இதுபோல்,...

ராமமூர்த்தி நகரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தாராபுரம், ஆக.29: தாராபுரம் அடுத்த கொளத்துப்பாளையம் பேரூராட்சி, ராமமூர்த்தி நகரில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. தாசில்தார் ராமலிங்கம் தலைமையில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முகாமினை துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து முகாமில் பெறப்பட்ட ஒரு சில மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு சான்றிதழ்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில்...

சுரைக்காய் விலை உயர்வு; விவசாயிகள் மகிழ்ச்சி

பல்லடம், ஆக. 27: சுரைக்காய் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறைவான தண்ணீரில் நல்ல விளைச்சலை கொடுக்கக் கூடியது சுரைக்காய் ஆகும். இதற்கு உற்பத்தி செலவு மிகவும் குறைவு. இதில் பாம்பு சுரை, கும்பச்சுரை என இரண்டு மூன்று ரகங்கள் உள்ளது. வைகாசி பட்டத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவியதால் விவசாயிகள் சுரைக்காய் சாகுபடி செய்திருந்தனர்....

வெள்ளக்கோவில் நகராட்சியில் 10 கிலோ போலி டீ தூள், 32 கிலோ பிளாஸ்டிக் அழிப்பு

வெள்ளக்கோவில், ஆக. 27: வெள்ளக்கோவிலில் பொது சுகாதாரத்துறை உணவு பாதுகாப்பு துறை காவல் துறை மற்றும் வெள்ளகோவில் நகராட்சி துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் இணைந்து புகையிலை தடுப்பு கள ஆய்வு மேற்கொண்டனர்.  இதில் பள்ளிகள் பேருந்து நிலையங்கள் பொதுமக்கள் கூடும் இடங்கள் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட சிகரெட், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கலப்படமாக...

நோயாளியின் செல்போனை திருடிய காவலாளி கைது

திருப்பூர், ஆக.27: திருப்பூர், நல்லூரை சேர்ந்தவர் காதர் ஒலி (28), இவர் பனியன் நிறுவன தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று காத்திருப்போர் அறையில் படுத்திருந்தார். அப்போது, காதர் ஒலியின் செல்போன் சட்டைப்பையில் இருந்து கீழே விழுந்துள்ளது. அதனை அரசு மருத்துவமனை காவலாளி மணிகண்டன் (34), திருடியுள்ளார். தொடர்ந்து செல்போன்...

அவிநாசி நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

அவிநாசி, ஆக. 23: அவிநாசி நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. முகாமில், அவிநாசி நகராட்சித்தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி, அவிநாசி நகராட்சி ஆணையாளர் வெங்கடேசுவரன் ஆகியோர் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முகாமில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன்நம்பி, மற்றும் அவிநாசி நகராட்சி மன்ற கவுன்சிலர்கள்...