நீடாமங்கலம், பரப்பனாமேடு பகுதியில் இன்று மின்தடை

நீடாமங்கலம், ஆக.30 நீடாமங்கலம் சுற்று வட்டாரப்பகுதியில் இன்று மின் விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் ஜான்விக்டர் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் 110/ 3311 கிலோ துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (30ம் தேதி) நடைபெற இரு ப்பதால் நீடாமங்கலம் மற்றும் பரப்பனாமேடு அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9...

பைக்குகள் மோதி விபத்து இளம்பெண் பஸ் சக்கரத்தில் சிக்கி பலி

முத்துப்பேட்டை, ஆக.30: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஆலங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுகுநாதன் (36). இவரது மனைவி பொன்மணி (25). திருமணமாகி நான்கு வருடங்களாகிறது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. சுகுநாதன் சிங்கப்பூரில் பணியாற்றி வருவதால் மனைவி பொன்மணி ஒரு வருடத்திற்கு முன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தற்காலிக ஆசிரியையாக பணியாற்றி வந்தார். நேற்றிரவு...

கொரடாச்சேரியில் இன்று நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

திருவாரூர், ஆக.30: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் இன்று நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் மோகனச்சந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்’ இன்று (30ம் தேதி)...

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 4.40 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் பணி

திருத்துறைப்பூண்டி, ஆக.29: திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 15 இடங்களில் 4.40 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் பணியைஎம்எல்ஏ, நகர்மன்ற தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திருவாரூர் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் ஏற்கனவே இருந்த மழைநீர் வடிகால் பகுதியில் ஆக்கிரப்புகள் அதிகரித்தால் சிறிய மழை பெய்தால் கூட நகரில் மழை நீர் தேங்கி நிற்கும் இதனால் பொதுமக்கள், வாகன...

முத்துப்பேட்டை பள்ளிவாசல் அருகே கழிவுநீர் வடிகாலை சீரமைக்க வேண்டும்

முத்துப்பேட்டை,ஆக.29: முத்துப்பேட்டை பள்ளிவாசல் கழிவுநீர் வடிகாலை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட 15-வது வார்டு தெற்குதெரு பேட்டை சாலையோரம் செல்லும் கழிவுநீர் வடிகால் குட்டியார் பள்ளிவாசல் முதல் அரபுசாகிப்பள்ளி வாசல் வரை ஆங்காங்கே சேதமாகியுள்ளன. இதனை சீரமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்டக்காலமாக...

குடிப்பழக்கத்தால் தகராறு மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை

திருவாரூர், ஆக.29: பேரளத்தில் குடும்ப செலவினத்தினற்கு பணம் தராமல் குடிப்பதை மனைவி கண்டித்ததால் மனம் உடைந்த கணவர் தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே இருந்து வரும் திருக் கொட்டாரம் கிராமத்தில் வசித்து வந்தவர் முதியவர் லட்சுமணன் (60). கூலித்தொழிலாளியான இவர் தினந்தோறும் வேலைக்கு சென்று விட்டு கூலிப்பணத்தில் மது அருந்திவிட்டு வந்ததாக...

முத்துப்பேட்டை தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம்

முத்துப்பேட்டை,ஆக.27: முத்துப்பேட்டை அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம் பேரூராட்சி தலைவர் தொடங்கிவைத்தார். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பெரியகடை தெருவில் உள்ள ஆவணா நேனா அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் துவக்க விழா காலை நடைபெற்றது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றியழகன் தலைமை வகித்தார்...

திருவாரூர் அருகே அரசுக்கு சொந்தமான குளத்தை தனிநபர் ஆக்கிரமிக்க முயற்சி

திருவாரூர், ஆக.27: திருவாரூர் அருகே அரசுக்கு சொந்தமான பொது குளத்தினை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாக மக்கள் அதிகாரம் கழகத்தினர் மற்றும் கிராம மக்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூர்அருகே அம்மையப்பன் ஊராட்சிக்குட்பட்ட ஆணை தென்பாதி கிராமத்தில் இருந்து வரும் அரசுக்கு சொந்தமான பொதுகுளம் ஒன்றினை அங்குள்ள 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள்...

இளைஞர் காங்கிரஸ் சார்பில் தேர்தல் கமிஷனை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வலங்கைமான், ஆக.27: திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் மத்திய பிஜேபி அரசுக்கு துணை போகும் தேர்தல் கமிஷனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒரே வாக்காளர் பல இடங்களில் வாக்களித்து இருப்பதையும், வீட்டு முகவரி கதவு எண் ஜீரோ என்பதையும், 70 வயது ஆன முதியவர் முதல் வாக்காளராக சேர்த்திருப்பதையும் ஆதாரத்துடன் விளக்கி திருத்துறைப்பூண்டி நகர மன்ற...

திருவாரூர் மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கான கல்வி திட்ட முகாம்

திருவாரூர், ஆக 22: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கள்ளிக்குடி, சிங்களாந்தி மற்றும் வேப்பஞ்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு நோற்று உறுப்பினர் கல்வி திட்ட முகாம் திருவாரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் நடத்தப்பட்டது. இம்முகாமில் இப்கோ உர நிறுவனத்தின் திருவாரூர் மாவட்ட மேலாளர் பரஞ்ஜோதி விவசாயிகளுக்கு நானோ உரங்கள் குறித்த விழிப்புணர்வு...