ஆவணி மாத முதல் முகூர்த்தம் திருத்தணி முருகன் கோயிலில் 70 ஜோடிகளுக்கு திருமணம்

திருத்தணி, ஆக.30: ஆவணி மாத முதல் முகூர்த்த நாளான நேற்று திருத்தணி முருகன் கோயிலில் கெட்டிமேளம் முழங்க 70 ஜோடிகளுக்குத் திருமணம் நடந்தது. முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி சுப்பிரமணியசாமி கோயிலில் திருமணம் நடைபெற்றால், அவர்களின் வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால், திருத்தணி முருகன் மலைக்கோயிலில் திருமணத்தை மிகுந்த...

திருவள்ளூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் கோலாகலம்: காக்களூர் ஏரியில் கரைப்பு

திருவள்ளூர், ஆக. 30: திருவள்ளூரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நகரின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காக்களூர் ஏரியில் கரைக்கப்பட்டது. நாடு முழுவதும் கடந்த 27ம்தேதி விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோயில்கள், முக்கிய இடங்கள் மற்றும் வீடுகளில் பொதுமக்கள் பல்வேறு...

கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால் எரும்பி ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேற்றம்: விவசாயிகள் மகிழ்ச்சி

ஆர்.கே.பேட்டை, ஆக.30: ஆர்.கே.பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால், எரும்பி ஏரி முழு கொள்ளளவை எட்டி, உபரிநீர் வெளியேறி வருவதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் மொத்தம் 38 ஏரிகள் உள்ளன. இதில், 10 ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலும், 28 ஏரிகள், குளங்கள் ஊராட்சி ஒன்றிய...

3ம் கட்டமாக பூந்தமல்லி பணிமனையில் இருந்து செப்டம்பர் முதல் 125 மின்சார பேருந்துகள் இயக்க முடிவு:  சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கும் பணிகள் மும்முரம்  போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல்

பூந்தமல்லி, ஆக. 29: மூன்றாம் கட்டமாக பூந்தமல்லி பணிமனையில் இருந்து செப்டம்பர் மாதம் முதல் 125 மின்சார பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுச்சூழல் பாதிப்புகளை தவிர்க்கும் விதமாக, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, எரிபொருள் செலவை குறைக்கும் வகையிலும், காற்று மாசை கட்டுப்படுத்தும் வகையிலும்,...

அண்ணன் உறவுமுறை சிறுவனுடன் காதல் முறையற்ற கருக்கலைப்பு செய்த கல்லூரி மாணவி உயிரிழப்பு:  நர்ஸ் உள்பட இருவர் கைது  பள்ளிப்பட்டு அருகே பரபரப்பு

திருத்தணி, ஆக. 29: பள்ளிப்பட்டு அருகே, ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தனியார் செவிலியர் டிப்ளமோ பயிற்சி கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர் கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு மாணவியை பரிசோதித்ததில், அவர் 5 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதில் அதிர்ச்சியான பெற்றோர்,...

அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர், ஆக.29: திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டியல் இன மக்களுக்கு சேவை புரிந்தவர்கள், டாக்டர் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் பட்டியலின மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக்கொண்டு,...

கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு தொழிற்சாலை நச்சு புகையால் மாணவிகளுக்கு மூச்சுத் திணறல்: மருத்துவமனையில் சிகிச்சை

கும்மிடிப்பூண்டி, ஆக. 27: கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் பெரும்பாலானவை இரும்பு உருக்காலை மற்றும் மின் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஆகும். அதிலிருந்து தினந்தோறும் நச்சுப் புகை வெளியேற்றுகிறது. இதனால் பாப்பன்குப்பம், சித்தராஜ் கண்டிகை, சிறுபுழல் பேட்டை, புதுகும்மிடிப்பூண்டி உள்ளிட்ட கிராம மக்கள் மூச்சு திணறல் உள்ளிட்ட நோயால்...

தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்வரத்து அதிகரிப்பு: 3 மாதங்களுக்கு பிறகு புழல் ஏரி மீண்டும் 3 டிஎம்சியாக உயர்வு

திருவள்ளூர், ஆக.27: மழை காரணமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் உள்பட சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் ஆகும். இந்த நீர்த்தேக்ககத்தின் மொத்த கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் தற்போது 2,379 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது....

விநாயகர் சிலை வைக்க பந்தல் அமைத்த வாலிபர் மின்சாரம் பாய்ந்து பலி

மாதவரம், ஆக.27: செங்குன்றம் அடுத்த கண்ணம்பாளையம் மண்ணடியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரசாத் (22). இவர், பந்தல் அமைக்கும் கடையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை மாதவரம் ராஜாஜி தெருவில் சிலை வைப்பதற்கான பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற உயரழுத்த மின்கம்பி மீது கம்பி...

திருத்தணி அருகே குவாரியில் கற்கள் வெட்டி எடுக்க தற்காலிக தடை: தாசில்தார் அதிரடி

திருத்தணி, ஆக. 23: தினகரன் செய்தி எதிரொலியாக திருத்தணி அருகே குவாரியில் கற்கள் வெட்டி எடுக்க தற்காலிக தடை விதித்து தாசில்தார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். திருத்தணி அருகே, சூரிய நகரம் ஊராட்சிக்கு உட்பட்ட கெஜலட்சுமிபுரம், எல்லம்பள்ளி பகுதியில் 2 கல்குவாரிகள் 3 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த குவாரிகளில் அதிக சத்தத்துடன் கூடிய...