கோயிலில் திருடியவர்கள் கைது
மூணாறு, ஆக. 29: மூணாறு அருகே குண்டளை எஸ்டேட் ஈஸ்ட் டிவிஷனில் முருகன் கோயில் வளாகத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் ஆக.5ம் தேதி இரவு உண்டியல், ஒன்றரை பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் கடந்த மாதம் அருவிக்காடு மாரியம்மன் கோயிலிலும் திருடர்கள் கைவரிசை காட்டினர். இது சம்பந்தமாக கோயில் நிர்வாகிகள் தேவிகுளம் போலீசில் புகார் அளித்தனர்.விசாரணையில்...
வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
போடி, ஆக. 29: போடி அருகே மீனாட்சிபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பெத்தணன் மனைவி ஈஸ்வரி (50). இவர் கடந்த 8ம் தேதி அதிகாலை 2 மணியளவில், வீட்டை பூட்டி விட்டு கொடைக்கானலில் உள்ள தனது அண்ணன் முருகன் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டிற்கு திரும்பியபோ, முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை...
கலெக்டர் அலுவலக வளாக நூலகத்தில் போட்டி தேர்வுக்கான சிறப்பு பிரிவு
தேனி, ஆக.27: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள நூலகத்தில், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் சிறப்பு பிரிவினை கலெக்டர் நேற்று துவக்கி வைத்தார். தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பயன்பெறும் வகையில் கடந்த ஜூன் 10ம் தேதி கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிய நூலகம் திறக்கப்பட்டது....
ஆவணங்களின்றி இயங்கிய வாகனங்களுக்கு அபராதம்
கொடைக்கானல், ஆக. 27: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஏரி சாலை பகுதியில் வத்தலக்குண்டு வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ தலைமையில் நேற்று திடீர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த வாகனங்களில் வாகன உரிம பதிவு, எப்சி புதுப்பிப்பு, இன்சூரன்ஸ் உள்ளிட்ட சோதனைகள் செய்யப்பட்டன. இதில் ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 2 சுற்றுலா வாகனங்கள்,...
மூணாறு அருகே சாலை சீரமைப்பு பணிகள்: ஒரு மாதத்திற்குள் முடிவடையும் என தகவல்
மூணாறு, ஆக.27: மூணாறு அருகே உள்ள மறையூர்-காந்தளூர் சாலை சீரமைப்பு பணி துவங்கியது. இப்பணிகள் ஒரு மாத காலத்திற்குள் முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், மறையூர் மற்றும் காந்தளூர் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ளது. கேரளா-தமிழ்நாடு எல்லை கிராமமான இங்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இப்பகுதிகளின் வளர்ச்சிக்கு...
போடி பள்ளியில் அடிக்கல் நாட்டு விழா
போடி, ஆக. 23: போடியில் நூற்றாண்டை கடந்த பழமை வாய்ந்த ஜமீன்தாரணி காமுலம்மாள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 3000க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர். இங்குள்ள பழைய கூடை பந்தாட்ட மைதானம் சிதலமடைந்த நிலையில் உள்ளதால் மாணவர்கள் விளையாடுவதற்கு சிரமமடைந்து வந்தனர்....
போடியில் ரூ.4 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்கு
போடி, ஆக. 23: போடி சின்னசவுடம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஜெகதீசன். இவரது மனைவி வலசம்மா (45). வினோபாஜி காலனியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி. இவரது மனைவி மாலதி (எ) டெய்சி. கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் வேளாங்கண்ணி-டெய்சி தம்பதியினர் வலசம்மாவிடம் ரூ.4 லட்சம் கடனாக பெற்றனர். ஆனால், பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்துள்ளனர்....
ஆலோசனை கூட்டம்
தேனி, ஆக. 23: பெரியகுளத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் பெரியகுளம் தொகுதி விசிக நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பெரியகுளம் தொகுதி செயலாளர் சுசி தமிழ்பாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் மண்டல செயலாளர் தமிழ்வாணன், ஒன்றிய செயலாளர் ஆண்டிப, நகர செயலாளர் ஜோதிமுருகன் முன்னிலை வகித்தனர். தொகுதி துணை செயலாளர் ஆண்டவர் வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில்...
உலக தொழில் முனைவோர்கள் தின விழா
சின்னமனூர், ஆக. 22: சின்னமனூர் அருகே காமாட்சிபுரம் சென்டெக்ட் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் உலகத் தொழில் முனைவோர் தின விழா மைய தலைவர் பச்சையம்மாள் தலைமையில் நடந்தது. உத்தமபாளையம் ஆர்.டி.ஓ செய்யது முகம்மது, தாசில்தார் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தொழில் முனைவோர் மையத்தின் உதவி இயக்குனர் மோகன்ராஜ், கனரா வங்கி மேலாளர்...