கல்லணையில் துணை தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்

திருக்காட்டுப்பள்ளி, ஆக.30: கல்லணையில் தீயணைப்புமீட்பு துணைநிலையம் அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருக்காட்டுப்பள்ளி அருகே கரிகாலன் கட்டிய கல்லணை உள்ளது. இது சுற்றுலா தலமாக இருப்பதால் புராதன சின்னங்கள், கரிகாலன் மணிமண்டபம், கரிகாலன் பூங்கா, சிறுவர் பூங்கா ஆகியவற்றை பார்வையிட நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தற்போது விவசாய...

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மழலையர் பள்ளி சிறுவர்கள் வாக்கத்தான்

தஞ்சாவூர், ஆக.30:புகழ்பெற்ற ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்தை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29ம் தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், தஞ்சையில் மழலையர் பள்ளியில் குழந்தைகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஒன்றினைந்து விளையாட்டின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் என்ற தலைப்பில்...

தஞ்சை வணிகவரி அலுவலகம் அருகே கரடுமுரடான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

தஞ்சாவூர், ஆக.30: தஞ்சாவூர் வணிகவரி அலுவலகம் அருகே கரடு முரடான சாலையை சீர் செய்து தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் வணிகவரி அலுவலகம் அருகே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு தினமும் ஏராளமானோர் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றன....

காராமணி தோப்பு பகுதியில் அட்டகாசம் செய்யும் குரங்குகளால் மக்கள் அவதி

தஞ்சாவூர், ஆக.29: தஞ்சாவூர் மாவட்டம் காராமணி தோப்பு குடியிருப்பு பகுதியில் அட்டகாசம் செய்யும் குரங்குளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா பொய்யுண்டார்கோட்டை அருகே காராமணி தோப்பு வடக்கு தெரு பகுதியில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும்அனைவரும்...

தஞ்சையில் இருந்து தூத்துக்குடி, தேனிக்கு 2,500 டன் அரிசி மூட்டைகள் அனுப்பி வைப்பு

தஞ்சாவூர், ஆக.29: தஞ்சையில் இருந்து தூத்துக்குடி, தேனிக்கு 2,500 டன் அரிசி மூட்டைகள் சரக்கு ரயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது தமிழகத்தின் நெற்களஞ்சியமாக திகழும் தஞ்சை மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக லாரிகள், சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நெல் அரவை...

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.7.5 லட்சம் கடன் உதவி

பேராவூரணி, ஆக.29: பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.7.5 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது. பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் பின்னவாசல், பைங்கால், சொர்ணக்காடு, வளப்பிரம்மன்காடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் படப்பனார்வயலில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் எம்எல்ஏ அசோக்குமார் கலந்து கொண்டு...

குறுங்காடு வளர்ப்பு திட்டத்தில் 20 ஆயிரம் சதுர அடியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

தஞ்சாவூர், ஆக.27: குறுங்காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட திருப்பதி நகர் பகுதியில் சுமார் 20 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்ட மரக்கன்று நடும் நிகழ்ச்சியை தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் செடிகளை நட்டு வைத்து துவக்கி வைத்தனர். தஞ்சை இன்னர் வீல் அமைப்பும், தஞ்சை மாநகராட்சி மற்றும்...

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுக்கடை அமைக்க தற்காலிக உரிமம் பெற வேண்டும்

தஞ்சாவூர், ஆக.27: இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்; தீபாவளிப் பண்டிகையையொட்டி பட்டாசுக்கடை அமைத்திட விரும்புவோர் வெடிபொருட்கள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருட்கள் விதிகள் 2008ன் படி தற்காலிக உரிமம் பெறவேண்டும். மேலும், உரிமம் பெற விரும்புவோர் கட்டடத்திற்கான வரைபடம், கடை அமைந்துள்ள இடத்தின் சட்டபூர்வ உரிமைக்கான ஆவணங்கள், முகவரிக்கான சான்று,...

திருக்காட்டுப்பள்ளி அருகே கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு

திருக்காட்டுப்பள்ளி, ஆக.27: பூதலூரில் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. திருக்காட்டுப்பள்ளி அருகே கொள்ளிடத்தில் இருந்து கூட்டி குடிநீர் திட்டத்தின் மூலம் பெரிய குழாய்கள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் எடுத்துச் செல்லப்படுகின்றது. இந்நிலையில், பூதலூர் பழைய யூனியன் அலுவலகம் அருகில் செல்லும் கூட்டுக் குடிநீர் குழாய்...

தேசிய கொடியை கட்டிக்கொண்டு அரை நிர்வாணமாக வந்த விவசாயி

கும்பகோணம், ஆக.22: கும்பகோணத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு தேசிய கொடியை இடுப்பில் கட்டிக்கொண்டு அரை நிர்வாணத்துடன் வந்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது. கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் பகுதியை சேர்ந்தவர் கோவிந்த வல்லப பந்த். விவசாயியான இவர் அப்பகுதியில் உள்ள குளங்களை தூர்வார வலியுறுத்தி, கடந்த 10 ஆண்டுகளாக பலமுறை மனு கொடுத்து போராடி வருவதாகவும், இதுவரை...