பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரி கல்லூரியில் தேசிய விளையாட்டு தினம்
பொன்னமராவதி, ஆக. 30: பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரி கல்லூரியில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்பட்டது. பொன்னமராவதி அருகே உள்ள கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் தேசிய விளையாட்டுத் தினத்த்தை முன்னிட்டு மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. கல்லூரி முதல்வர் பழனியப்பன் தலைமை வகித்தார். வணிகவியல் துறைத் தலைவர் பேராசிரியர் முகமது இப்ராஹிம் மூசா...
அன்னவாசல் அருகே போதையில் தவறி விழுந்து கூலித்தொழிலாளி பலி
இலுப்பூர். ஆக. 30: அன்னவாசல் அருகே பாலத்தின் மீது அமர்ந்திருந்த கூலி தொழிலாளி நிலை தடுமாறி தவறிவிழுந்து இறந்தார். அன்னவாசல் அருகே உள்ள லெக்கனாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (34). கூலித்தொழிலாளி, இவர், கடந்த ம்25 தேதி லெக்கனாபட்டியில் உள்ள தனது தாத்தா வீட்டின் அருகே உள்ள பாலத்தில் அமர்ந்திருந்தார். அப்போது நிலை தடுமாறி பின்புறம்...
வேலாயுதம்பாளையம் அருகே திடீர் தீ விபத்தில் ஒரு ஏக்கர் கோரை சாம்பல்
வேலாயுதம்பாளையம், ஆக. 8: புகளூரில் கோரைபுள்ளில் பற்றிய தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். கரூர் மாவட்டம் நன்செய் புகளூர் தவுட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் திருவள்ளுவர். விவசாயி. இவரது நிலத்தில் பாய் தயாரிக்கும் கோரை பயிர் செய்திருந்தார். கோரை அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில் கோரையில் நேற்று திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. காற்றின் காரணமாக...
பொன்னமராவதிக்கு புதிய ரயில் சேவை தொடங்க வேண்டும்
பொன்னமராவதி, ஆக. 29: பொன்னமராவதி வழியாக மதுரைக்கு ரயில் சேவை துவங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதியில் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் ரயில் சேவைக்கு மதுரை, புதுக்கோட்டை, திருச்சி போன்ற பகுதிகளுக்கு சென்று தான் ரயில் பிடிக்கவேண்டும். இப்பகுதியில் உள்ள சிறுவர்கள் ரயிலை சுற்றுலா சென்று தான் பார்க்கவேண்டிய...
காரையூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
பொன்னமராவதி, ஆக. 29: பொன்னமராவதி அருகே காரையூர் பகுதிக்கு தனியாக தீயணைப்பு நிலையம் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொன்னமராவதியில் தீயணைப்பு நிலையம் உள்ளது. பொன்னமராவதி தாலுகாவில் 42கிராம ஊராட்சி 200க்கும் மேற்பட்ட கிராமங்களும் உள்ளன. இதனால் அவசர தேவைகளுக்கு பொன்னமராவதியில் இருந்து 15 கிமீ தூரத்திற்கு மேல் உள்ள காரையூர் பகுதிக்கு செல்வதற்குள்...
குவாண்டம் மெஷின் லெர்னிங் கருத்தரங்கம்
புதுக்கோட்டை,ஆக. 27: புதுக்கோட்டை மவுன்ட் சியோன் இன்ஜினியரிங் கல்லூரி இணையக்கணிப்பியல் மற்றும் தரவியல் அறிவியல் துறை சார்பில் “குவாண்டம்மெஷின்லெர்னிங்” என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் கல்லூரிஅரங்கத்தில் நடைபெற்றது. இதில் திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகம், கணினியில் துறையின் உதவி பேராசிரியர் டாக்டர் அஷ்விந்த் ஜனார்த்தனன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கருத்தரங்கத்தின்தொடக்கத்தில், செயற்கை நுண்ணறிவு மற்றும்...
நாகுடி அரசு சுகாதார நிலையத்தில் கண் மருத்துவரை நியமிக்க வேண்டும் கல்லணை கால்வாய் பாசன சங்க ஒருங்கிணைப்பு குழு வலியுறுத்தல்
அறந்தாங்கி,ஆக. 27: புதுக் கோட்டை மாவட்ட கல்லணை கால்வாய் பாசன ஒருங்கிணைப்பு குழு சங்க தலைவர் கொக்கு மட ரமேஷ் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் நாகுடியில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்தில் கண் மருத்துவர் நீண்ட நாட்களாக இல்லை....
தொன்னங்குடி-வைத்தூர் சாலை அகலப்படுத்தும் பணி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு
புதுக்கோட்டை,ஆக. 27: தொன்னங்குடி வழியாக வைத்தூர் செல்லும் சாலை அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். புதுக்கோட்டை தாலுகா, புதுக்கோட்டை-கிழக்கு நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள தொன்னங்குடி வழியாக வைத்தூர் செல்லும் 1.20 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையானது விவசாயிகள் விளை பொருட்களை சந்தைக்கு எடுத்துச்செல்லவும், பள்ளி குழந்தைகள் சிரமமின்றி பள்ளிக்கு சென்றுவரவும்,...
கந்தர்வகோட்டை ஊராட்சியில் தூய்மை பணிகள் மும்முரம்
கந்தர்வகோட்டை, ஆக.22:புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சியில் தூய்மை பணிகள் மும்முரமாக நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் அரசினர் ஆண்கள் மேல்நிலைபள்ளிக்கு செல்லும் மாரியம்மன் கோவில் வீதியில் அதிக அளவில் குப்பைகளும். தெருயோர செடிகளும் இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக ஊராட்சி செயலாளர் ரவிசந்திரனிடம் பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் உடனே நடவடிக்கை எடுத்து தூய்மை பணியாளர்களை கொண்டு...