லோடு வாகனம் கவிழ்ந்து ஒருவர் பலி: 5 பேர் காயம்
பெரம்பலூர், ஆக.30: பெரம்பலூர் அருகே கூலித் தொழிலாளர்கள் பணிமுடிந்து லோடு வாகனத்தில் சென்றபோது, வாகனம் கவிழ்ந்து ஒருவர் இறந்தார், 5 பேர் காயமடைந்தனர். பெரம்பலூர் அடுத்த வேப்பந்தட்டை கிராமத்தில் வேலை செய்த கூலியாட்களை லோடு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தூத்துகுடியை சேர்ந்த மாதவன் (27) என்பவர் பெரம்பலூருக்கு சென்றார். அப்போது, ஆத்தூர்- பெரம்பலூர் சாலை சோமாண்டபுதூர் பிரிவு...
பெரம்பலூர் மாவட்டத்தில் போதிய அளவு விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன
பெரம்பலூர், ஆக.30: பெரம்பலூர் மாவட்டத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வேளாண் துறை சார்பில் மாவட்டத்தில் பெய்த மழையளவு, உரங்கள் கையிருப்பு மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து வேளாண்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை சராசரியாக 861 மி.மீ, மழையளவாகும். மாவட்டத்தில் 2025 ஆகஸ்ட் மாதம் பெய்ய வேண்டிய மழையளவு 75.00மி.மீ., பெய்த மழையளவு...
முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான வாலிபால் சு.ஆடுதுறை பள்ளி முதலிடம்
குன்னம், ஆக.29: சு. ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலமைச்சர் கோப்பை வாலிபால் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலமைச்சர் கோப்பைக்கான வாலிபால் போட்டியில் முதலிடம் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றார்....
பெரம்பலூரில் தமுமுக 31ம் ஆண்டு துவக்க விழா
பெரம்பலூர், ஆக.29: பெரம்பலூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 31ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கட்சிக் கொடியேற்றப்பட்டது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் 31ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மதரசா சாலையில் தமுமுகவின் கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட...
அமைப்புசாரா தொழிலாளர்கள் பயன்பெறலாம் அரும்பாவூரில் நாளை நலம்காக்கும் ஸ்டாலின் முகாம்: தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
பெரம்பலூர், ஆக.29: பெரம்பலூர் தொழிலாளர் உதவி ஆணையர் பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, அரும்பாவூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நாளை (30ம் தேதி) \”நலன் காக்கும் ஸ்டாலின்\” திட்ட மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இம் மருத்துவ முகாமில், பதிவு பெற்ற அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும்...
கொள்ளிடம் அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி பஸ் மோதி பலி
கொள்ளிடம், ஆக. 27: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே நல்லநாயக புரம் கிராமம் பெரிய தெருவைச் சேர்ந்தவடமலை மனைவி பட்டு (80). இவர் நேற்று கொள்ளிடம் அருகே புத்தூர் குமிளங்காடு நாகாத்தம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, திரும்பி கடைவீதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த...
சு.ஆடுதுறையில் ஆலோசனை கூட்டம்
குன்னம், ஆக. 27: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் சு.ஆடுதுறை கிராமத்தில் உள்ள குற்றம் பொறுத்தவர் கோயிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலாயம் செய்யப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று தேதி குறிப்பது பற்றிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. செயல் அலுவலர் பொறுப்பு அசலாம்பிகை அறங்காவலர் குழு தலைவர் கவியரசன்...
பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் பிறந்தநாள் விழா
பெரம்பலூர், ஆக 27: பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்விநிறுவனங்களின் தலைவர் சேவைச் செம்மல் டாக்டர். திரு.சிவசுப்பிரமணியம் பிறந்தநாள் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவினை முன்னிட்டு இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்ட்டிருந்தது. இதில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் 72-பேர் இரத்ததானம் செய்தனர். மேலும் மாற்று திறனாளிகள் காப்பகத்தை சேர்ந்த மாணவ. மாணவியருக்கும் அங்கு...
துறைமங்கலம் ஏரிக்கு நீர்செல்லும் வரத்து வாய்க்காலில் புதர்போல் மண்டிகிடக்கும் கோரைபுற்கள்
பெரம்பலூர், ஆக.22: கலெக்டர் அலுவலக சாலையில் கோரைபுற்கள் புதர்போல் மண்டிக் கிடக்கும் துறைமங்கலம் ஏரிக்கான வரத்து வாய்க்காலை வடகிழக்கு பருவமழைக்கு முன்பு சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் சங்கிலி தொடர்ச்சி வரத்து வாய்க்கால்கள் கொண்ட ஏரிகள் அதிகம் உள்ளன. இதில் பிரதானமாக லாடபுரம் பெரிய ஏரியில் இருந்து நிரம்பி வரும் தண்ணீர் வரத்து...