பள்ளிகளுக்கான கலைத்திருவிழா

ஊட்டி, ஆக.29: ஊட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கான கலைத்திருவிழா தலையாட்டு மந்து பள்ளி வளாகத்தில் நடந்தது. மாணவர்களின் தனித் திறமைகளை வளர்க்கும் வகையில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையால் ஆண்டுதோறும் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதனை முன்னிட்டு 2025-26ம் ஆண்டிற்கான கலை திருவிழா போட்டிகள், ‘பசுமையும் பாரம்பரியமும்’ என்ற மைய கருத்தின் அடிப்படையில், சோலாடா அரசு பள்ளி அளவில்...

சாலையோர உணவு கடையில் முதியவர் சாவு

பாலக்காடு, ஆக.29: பாலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரி அடுத்த மங்கலம் டேம் சந்திப்பு சாலையோர உணவு கடை பெஞ்சில் முதியவர் உயிரிழந்த நிலையில் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.மங்கலம் டேம் அடுத்த பைதலா பகுதியைச் சேர்ந்தவர் ஜோர்ஜ் (65). இவருக்கு ஷென்ஸி என்ற மனைவி, அநூப், அனீஷ், ஜோபி என மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில், ஜோர்ஜ்...

சுற்றுலா தலங்களுக்கு செல்லும் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்

குன்னூர், ஆக.29: நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அடுத்தபடியாக குன்னூர் பகுதியில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.  குறிப்பாக, தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்காக்களும், வனத்துறை கட்டுப்பாட்டில் லேம்ஸ்ராக், டால்பின்நோஸ் ஆகிய சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்நிலையில், லேம்ஸ்ராக் மற்றும் டால்பின் நோஸ் செல்லும் சாலை ஒரே வழிதடத்தில் இருப்பதால் தினந்தோறும் அந்த சாலையில்...

அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் துவக்கம்

ஊட்டி, ஆக. 27: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட சிஎஸ்ஐ., சிஎம்எம்., பள்ளி மற்றும் காந்தல் புனித அந்தோனியார் பள்ளிகளில் நேற்று இத்திட்டம் துவக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், நகராட்சி கமிஷ்னர் வினோத் முன்னிலை வகித்தார். நகராட்சி துணைத் தலைவர் ரவிக்குமார், திட்டக்குழு உறுப்பினர் ஜார்ஜ் ஆகியோர் இத்திட்டத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து, அவர்கள் மாணவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டனர். இந்நிகழ்ச்சியில்,...

தமிழியக்கம் அமைப்பு கதைச்சொல்லி நிகழ்ச்சி

ஊட்டி, ஆக. 27: நீலகிரி மாவட்டம், ஊட்டி காந்தல் பகுதியில் நகராட்சி நூலகம் மற்றும் அறிவுசார் மையம் உள்ளது. இந்த மையத்தில் தமிழியக்கம் அமைப்பு சார்பில் குழந்தைகளுக்கான கதைச்சொல்லி நிகழ்ச்சி நடந்தது. நூலகர் அசினா வரவேற்றார். தமிழியக்கம் தலைவர் அமுதவல்லி, தமிழியக்கம் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ரமணா, அண்ணாமலை பல்கலைக்கழகம் பதிவாளர் (ஓய்வு) நடராஜன் ஆகியோர் சிறப்புரை...

தேனாடு பகுதியில் காட்டேஜுக்கு சீல்

ஊட்டி, ஆக. 27: ஊட்டி அருகே அனுமதியின்றி கட்டப்பட்ட காட்டேஜ்க்கு மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர். நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் மாஸ்டர் பிளான் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள ேவண்டுமாயின், வனத்துறை, புவியியல் துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை ஆகியவைகளிடம்...

மழையால் பாதிக்கப்பட்ட பழங்குடியின குடும்பங்களுக்கு உதவி

கூடலூர், ஆக.23: கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட புறமண வயல் பழங்குடியினர் குடியிருப்பில் 45 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக இவர்களது வீடுகளில் மேற்கூரைகளில் நீர் கசிந்து வீட்டிற்குள் உள்ள பொருட்கள் சேதம் அடைந்தன. மேலும் இங்கு வசித்தவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகினர். இவர்களுக்கு இந்திய செஞ்சிலுவைச் சங்கம்...

சமூக விரோத செயல்கள் அதிகரிப்பதால் பயனற்ற நிழற்குடையை அகற்ற கோரிக்கை

குன்னூர்,ஆக.23: நீலகிரி மாவட்டம் குன்னூர் பேரட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாரத் நகர் மற்றும் கல்குழி பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கல்குழி பகுதியில் நிழற்குடை அமைக்கப்பட்டது. ஆனால் மக்கள் ஏறி செல்ல முடியாதவாறு உயரமான இடத்திலும்,சம்பந்தமில்லாத இடத்திலும் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டதால் அந்த நிழற்குடை பராமரிப்பு இல்லாமல் புதர்...

வாக்கு இயந்திரங்களின் பயன்பாடு குறித்த செயல் விளக்க மையம் திறப்பு

பாலக்காடு,ஆக.23: பாலக்காடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு தேர்தல் வாக்குச்சாவடி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாடு குறித்த செயல் விளக்க மையத்தை கலெக்டர் திறந்து வைத்தார். உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பாலக்காடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடியில் பயன்படுத்தக் கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து செயல் விளக்க விழிப்புணர்வு...

தலைகுந்தா பகுதியில் சாலையில் சுற்றித்திரியும் குதிரைகள்

ஊட்டி, ஆக. 22: ஊட்டி-கூடலூர் சாலையில் தலைகுந்தா பகுதியில் கூட்டம், கூட்டமாக உலா வரும் குதிரைகளால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். ஊட்டி-கூடலூர் சாலையில் எச்பிஎப் முதல் தலைகுந்தா வரை சாலையில் சுமார் 30க்கும் மேற்பட்ட போனி குதிரைகள் உலா வருகின்றன. இவை சாலையில் அவ்வப்போது தறிகெட்டு ஓடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்....