முதியவரின் இறுதிச்சடங்கில் டூவீலர் பாய்ந்து 15 பேர் காயம்

  மல்லசமுத்திரம், டிச. 8: மல்லசமுத்திரம் அருகே முதியவரின் இறுதி சடங்கு நடந்து கொண்டிருந்த கூட்டத்துக்குள் மின்னல் வேகத்தில் புகுந்த டூவீலரால் 15பேர் காயம் அடைந்தனர். நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகே திருச்செங்கோடு- நாமக்கல் ரோட்டில் உள்ள புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (70). நேற்று முன்தினம், இவர் வயது மூப்பு காரணமாக இறந்தார். அவரின்...

1.95 லட்சம் வாக்காளர்களை நீக்க முடிவு?

  கணக்கெடுப்பு படிவங்கள் 100 சதவீதம் மின்னணு மயமாக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், இரட்டை பதிவு என்ற அடிப்படையில், சுமார் 1.95 லட்சம் வாக்காளர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பான பட்டியல், அந்தந்த சட்டமன்ற தொகுதி வாரியாக தயாரிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி ஏஜென்டுகளின் வாட்ஸ்அப் குரூப்களில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பதவிடப்பட்டுள்ளது....

பெட்டிக்கடையில் மது விற்றவர் கைது

  பள்ளிபாளையம், டிச. 8: பள்ளிபாளையம் காவிரி ரயில் நிலையம் அருகே, பெட்டி கடையில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பள்ளிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சோதனையிட்டார். இதில் பெட்டி கடையில் பதுக்கி வைத்திருந்த 13 ஆப் மதுபாட்டில்கள்...

சந்து கடையில் மது விற்ற 2 பேர் கைது

பள்ளிபாளையம், டிச.7: பள்ளிபாளையம் அருகே சந்து கடையில் மதுவிற்ற 2 பேரை கைது செய்த போலீசார், மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள பார் உரிமையாளரை வலைவீசி தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் மதுபானங்களை பதுக்கி, கூடுதல் விலைக்கு 24 மணிநேரமும் விற்பனை செய்வதாக பள்ளிபாளையம் டிஎஸ்பிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து...

டூவீலர் திருட முயன்ற வாலிபர் கைது

ராசிபுரம், டிச.7: நாமகிரிப்பேட்டை அருகே மெட்டாலா ஆஞ்சநேயர் கோயில் காவலாளியின் டூவீலரை திருட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் நாகிரிப்பேட்டை ஒன்றியம் கார்கூடல்பட்டியை சேர்ந்தவர் பெரியண்ணன் மகன் சின்னுசாமி(45). இவர், மெட்டாலா ஆஞ்சநேயர் கோயிலில் இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். வழக்கமாக வீட்டில் இருந்து டூவீலரில் பணிக்கு வந்து விட்டு,...

தனியார் பஸ்களில் ஏர்ஹாரன்கள் அகற்றம்

பள்ளிபாளையம், டிச.7: பள்ளிபாளையம் நான்குசாலை பகுதியில் காலை மாலை நேரங்களில் தனியார் பேருந்துகள் அதிக ஒலி எழுப்பியபடி அசுர வேகத்தில் செல்கின்றன. குறுகலான சாலையில் கூட்டம் மிகுந்த நேரத்தில் அசுர வேகத்தில் வரும் பேருந்துகள் ஏர்ஹாரன்களை அலறவிட்டு மக்களை அச்சுறுத்துகின்றன. இதனால், டூவீலரில் வருவோர் பலரும் இந்த இரைச்சலில் பதட்டமடைந்து விபத்தில் சிக்குகின்றனர். காலையில் பள்ளி...

2600 டன் கோழித்தீவன மூலப்பொருள் வருகை

நாமக்கல், டிச.6: நாமக்கல் ரயில் நிலையத்திற்கு நேற்று சரக்கு ரயில் மூலம், கோழித்தீவனத்திற்கு தேவையான மூலப்பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து நேற்று 2 ஆயிரத்து 600 டன் கடுகு புண்ணாக்கு சரக்கு ரயிலில் நாமக்கல் வந்தது. கோழிதீவனம் தயாரிக்க முக்கிய மூலப்பொருளாக கடுகுபுண்ணாக்கு பயன்படுத்தப்படுகிறது. சரக்கு ரயிலில்...

ரூ.2.14 லட்சத்திற்கு கொப்பரை ஏலம்

மல்லசமுத்திரம், டிச.6: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில் வாரம்தோறும் கொப்பரை ஏலம் நடந்து வருகிறது. நேற்றைய ஏலத்திற்கு சுற்று வட்டார பகுதியில் இருந்து 60 கிலோ எடை கொண்ட 37 மூட்டை கொப்பரையை விவசாயிகள் கொண்டு வந்து குவித்தனர். முதல் தரம் கிலோ ரூ.130.50 முதல் ரூ.180.50 வரையிலும், 2ம்...

அரசு பள்ளியில் தமிழ்கூடல் நிகழ்ச்சி

குமாரபாளையம், டிச.6: வேமங்காட்டுவலசு அரசு உயர்நிலை பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் நடைபெற்ற போட்டிகளில் பள்ளி குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். குமாரபாளையம் வேமங்காட்டு வலசு அரசு உயர்நிலைப் பள்ளியில், தமிழ்க் கூடல் நிகழ்ச்சி நடந்தது. பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் மாதேசு தலைமை வகித்து பேசினார். பள்ளியின் மேலாண்மை குழு தலைவர் அஜந்தா...

ராசிபுரம் நகராட்சியில் கடை டெண்டர் ரத்து

ராசிபுரம், டிச.5: ராசிபுரம் நகராட்சி சார்பில், ராசிபுரம் பழைய பஸ் நிலையம் பகுதியில், ரூ.5.75 கோடி மதிப்பில், 20க்கும் மேற்பட்ட கடைகள், பார்க்கிங் வசதியுடன் வணிக வளாகம் கட்டப்பட்டு வருகிறது. 90 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில், கடைகளை டெண்டர் விட உள்ளதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. பணிகள் முடியாத நிலையில், கடைகளை டெண்டர் விடக்கூடாது...