சாலையில் தேங்கும் கழிவுநீரால் மக்கள் அவதி
அவனியாபுரம், ஆக. 30: மதுரை, அவனியாபுரம் புறவழிச்சாலையில் அமைந்துள்ள எம்ஜிஎம் நகரில் கழிவு நீர் சாலையில் தேங்குவதுடன் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு அப்பகுதி மக்கள் சாலையில் நடமாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த பிரச்னை குறித்தும், உரிய நடவடிக்கை எடுகக் வலியுறுத்தியும் இப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை மனு...
கொத்தனார் விஷமருந்தி தற்கொலை
மதுரை, ஆக. 30: மதுரை அருகே பெருங்குடி சங்கையா கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம்(50). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் உரிய நேரத்தில் உணவு சாப்பிடாமல் போனதால் இவருக்கு அல்சர் பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வயிற்றுவலி அதிகமானதாக தெரிகிறது. இதனால் வேதனையடைந்த அவர் சம்பவத்தன்று வீட்டில் யாரும்...
பாரத ஸ்டேட் வங்கி சார்பில் செயல் விளக்க திட்ட முகாம்
அலங்காநல்லூர். ஆக. 29: பாலமேடு அருகே ராஜக்காள்பட்டி கிராமத்தில், பாரத ஸ்டேட் வங்கி கிளை சார்பில் ஊரகப்பகுதி வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு செயல்விளக்க திட்ட முகாம் நேற்று நடைபெற்றது. இதற்கு மதுரை நான்காம் மண்டல மேலாளர் மதன் தலைமை தாங்கினார். நிதி மேலாண்மை மேலாளர் ரம்யா முன்னிலை வகித்தார். கிளை மேலாளர் தனபால விக்னேஷ் அனைவரையும் வரவேற்றார்....
தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் பாலாலயம்
மதுரை, ஆக. 29: மதுரை வண்டியூரில் உள்ள தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நேற்று பாலாலயம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உப கோயிலுக்கு விமான பாலாலயம் நடத்தி திருப்பணிகள் மேற்கொண்டு திருக்குடமுழுக்கு நடைபெற இருக்கிறது. முதற்கட்டமாக நேற்று காலை 8.30 மணிக்கு...
கட்டிட தொழிலாளி தவறி விழுந்து சாவு
மதுரை, ஆக. 29: மதுரை, சிம்மக்கல் காமாட்சி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சரவணக்குமார் (55). இவர் சென்ட்ரிங் கம்பி கட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கட்டிடம் ஒன்றில் முதல் மாடியில் இவர் கம்பி கட்டும் வேலைகளை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறி கீழே...
பிரசார பயணத்திற்கான அழைப்பிதழுடன் அதிமுகவினர் சாமி தரிசனம்
மதுரை, ஆக. 27: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக செப். 1ம் தேதி துவங்கி 4 நாட்களுக்கு மதுரையில் பிரசாரம் செய்ய உள்ளார். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப்பயணத்திற்கான அழைப்பிதழை வைத்து அதிமுகவினர்...
ஏஐடியூசி நிர்வாகக் குழு கூட்டம்
மதுரை, ஆக. 27: அரசு போக்குவரத்துக் கழக ஏஐடியூசி ஓய்வு பெற்ற தொழிலாளர் சங்க மாநில நிர்வாகிகள் மற்றும் நிர்வாக குழு கூட்டம் நேற்று போக்குவரத்து கழக ஏஐடியூசி அலுவலகத்தில் நடந்தது. மாநில தலைவர் நாச்சிமுத்து தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் நாராயண சிங் வேலை அறிக்கை மற்றும் ஸ்தாபன அமைப்பு நிலை பற்றி...
விபத்தில் போலீஸ்காரர் படுகாயம்
மதுரை, ஆக. 27: இரண்டு டூவீலர்கள் மோதிய விபத்தில் போலீஸ்காரர் படுகாயமடைந்தார். மதுரை ஆண்டார்கொட்டாரம் அய்யனார் நகரை சேர்ந்தவர் சிலம்பரசு(30). இவர் மதுரை சிறப்பு காவல்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றுகிறார். ஆண்டார்கொட்டாரத்தில் இருந்து கருப்பாயூரணி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கணபதி நகர் வரும் போது இவர் ஓட்டி சென்ற டூவீலர் மீது முத்துப்பாண்டி என்பவர்...
திருநங்கையருக்கு சமூக விழிப்புணர்வு கூட்டம்
மதுரை, ஆக. 23: மதுரை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை நுண்ணறிவு பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவு இணைந்து, நேற்று திருநங்கையருக்கான சமூக விழிப்புணர்வு கூட்டத்தை மதுரை ரயில் நிலையத்தில் நடத்தியது. இதில் யாசகம் கேட்டு ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் வருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், அவர்களின் சமூக பொருளாதார நிலையை...