உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

ஓசூர், ஆக.30: ஓசூர் ஒன்றியம், பேகேப்பள்ளி ஊராட்சியை சேர்ந்தவர்களுக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ கலந்து கொண்டு, பொதுமக்கள் வழங்கிய மகளிர் உரிமைத்தொகை, வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், மின்இணைப்பில் பெயர் மாற்றம், ஆதார் திருத்தம், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ்,...

தக்காளி தோட்டத்தை சேதப்படுத்திய யானைகள்

தேன்கனிக்கோட்டை, ஆக.30: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள குருபட்டி கிராமத்தில், பேலாளம் பகுதியை சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி என்பவர், 4.5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலத்தில் அவர் தக்காளி பயிரிட்டு இருந்தார். நேற்று முன்தினம் இரவு, அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள், கிருஷ்ணமூர்த்தியின் தக்காளி...

தார்சாலை விரிவாக்க பணிகளை அதிகாரி ஆய்வு

தேன்கனிக்கோட்டை, ஆக.30: கிருஷ்ணகிரி நெடுஞ்சாலை கோட்டம், தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்திற்கு உட்பட்ட ராயக்கோட்டை-அத்திப்பள்ளி சாலையில், முதல்வரின் சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ், இரண்டு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலை பணிகளை, நேற்று கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் திருலோகச்சந்தர் களஆய்வு மேற்கொண்டார். அப்போது, பணிகளை தரமாகவும், விரைவாகவும் செய்து...

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்

கிருஷ்ணகிரி, ஆக.29: கிருஷ்ணகிரியில் நேற்று நடந்த முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் 955 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் சிவப்பிரகாசம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ் ஆகியோர்...

ஓசூரில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

ஓசூர், ஆக.29: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், உளிவீரனப்பள்ளி பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது அவ்வழியாக சந்தேகப்படும்படி வந்த 2பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்ற போலீசார், கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில்...

மணல், ஜல்லிக்கற்கள் கடத்திய 2 டிப்பர் லாரிகள் பறிமுதல்

ஓசூர், ஆக.29: ஓசூர் தாசில்தார் குணசிவா மற்றும் அலுவலர்கள், நேற்று முன்தினம் மத்திகிரி பஸ் நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டு இருந்த டிப்பர் லாரியை சோதனை செய்தனர். அதில், 2 யூனிட் மணல் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், மத்திகிரி காவல்...

காவேரிப்பட்டணம் அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

காவேரிப்பட்டணம், ஆக.27: காவேரிப்பட்டணம் ஒன்றியம், குண்டலப்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமினை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் மகேஸ்வரி துவக்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, சமூக...

முதமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் கலெக்டர் துவக்கி வைத்தார்

கிருஷ்ணகிரி, ஆக.27: கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியினை கலெக்டர் துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று துவங்கியது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் கொடியசைத்து போட்டிகளை துவக்கி வைத்தார். விழாவில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்...

ஊத்தங்கரை போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., திடீர் ஆய்வு

ஊத்தங்கரை, ஆக.27: ஊத்தங்கரை போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., திடீர் ஆய்வு மேற்கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, சிங்காரபேட்டை ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில், மாவட்ட எஸ்பி தங்கதுரை திடீர் ஆய்வு மேற்கொண்டார். சிங்காரபேட்டை காவல் நிலையத்தில் போலீஸ் எஸ்ஐ நித்தியா, ஊத்தங்கரை காவல் நிலையத்தில் எஸ்ஐ மோகன் ஆகியோரிடம் காவல்நிலையத்தின் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து வழக்குகள்...

விநாயகர் சிலைகள் விற்பனை

ராயக்கோட்டை, ஆக.23: நாடு முழுவதும் வரும் 27ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா ெகாண்டாடப்படுகிறது. விழாவிற்கு இன்னும் 4நாட்களே உள்ள நிலையில், ராயக்கோட்டை அருகே பிள்ளையார் அக்ரஹாரம், கொப்பகரை, கூலியம் ஆகிய பகுதிகளில் சிறியது முதல் பெரியது வரை பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகளை தயார் செய்து விற்பனைக்கு வைத்துள்ளனர். தயார் நிலையில் உள்ள விநாயகர்...