வாங்கல் சாலையோரம் கோழி கழிவுகளை கொட்ட கூடாது
கரூர், ஆக, 30: கரூர் வாங்கல் சாலையோரம் கோழி கழிவுகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் வாங்கல் சாலையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், கரூர் வாங்கல் சாலையில் அரசு காலனி பகுதியை தாண்டியதும், சாலையோரம் அதிகளவு...
பெட்டி, டீக்கடைகளில்200 கிராம் குட்கா பொருட்கள் பறிமுதல்: 2 பேர் மீது வழக்கு பதிவு
கரூர், ஆக. 30: கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பெட்டிக்கடை, டீக்கடைகளில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதாக 2 பேர் மீது போலீசார் வழக்கு விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக, அந்தந்த காவல் நிலைய போலீசார், மதுவிலக்கு போலீசார் கடந்த சில...
வேலாயுதம்பாளையத்தில் நாளை மறுநாள் மின்தடை
வேலாயுதம்பாளையம், ஆக. 29: கரூர் மாவட்டம் நொய்யல் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் 30-ந்தேதி, சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் மேற்கண்ட துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான நொய்யல், குப்பம், அத்திப்பாளையம், மரவாபாளையம், புங்கோடை,...
புகழூர் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
கரூர், ஆக. 29: புகழூர் நகராட்சியில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புகழூர் நகராட்சியில், வார்டு எண்.5, 14, 15-க்கு ஆர்.எஸ்.ரோடு காந்தியார் மண்டபத்திலும், அரவக்குறிச்சி வட்டாரத்தில், நாகம்பள்ளி ஊராட்சிக்கு மலைக்கோவிலுார் ஈஸ்வரன் கோயில் மண்டபத்திலும், குளித்தலை வட்டாரத்தில், திம்மம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியிலும்,...
கிருஷ்ணராயபுரத்தில் மரக்கன்றுகள் பராமரிப்பு
கிருஷ்ணராயபுரம், ஆக. 29: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சார்பில் கரூர் கோட்டப்பொறியாளர் ரவிக்குமார்,கிருஷ்ணராயபுரம் உதவிக்கோட்டப் பொறியாளர். கர்ணன் ஆலோசனைப்படி, மழைக்காலங்களில் சாலை ஓரங்களில், மண் அரிமானத்தை தவிர்க்கும் வகையில் கிருஷ்ணராயபுரம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு உதவி பொறியாளர் அசாருதீன் தலைமையில் நேற்று திருக்காம்புலியூர் ஊராட்சி,...
அரவக்குறிச்சி அரசு கல்லூரி மாணவன் மாநில அளவிலான சாகச பயிற்சியில் சாதனை
கரூர், ஆக. 26: மாநில அளவிலான நடைபெற்ற சாகச பயிற்சியில் அரவக்குறிச்சி அரசு கலைக் கல்லூரி மாணவன் தேர்வு செய்யப்படார். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நடைபெற்ற மாநில அளவிலான சாகச பயிற்சியில் அரவக்குறிச்சி உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் பி.ஏ.ஆங்கிலம், 2ம் ஆண்டு படித்து வரும் அஜய்குமார் என்ற மாணவர் சாகச பயிற்சியில் மாநில...
கரூர் ராயனூர் அருகே நினைவுச் சின்ன ஸ்தூபி ஆக்கிரமிப்பு
கரூர், ஆக. 27: கரூர் ராயனூர் அருகேயுள்ள நினைவுச் சின்ன ஸ்தூபியை சுற்றியுள்ள ஆக்ரமிப்புகளை அகற்றவேண்டுமென கோரிக்கைவைக்கப்பட்டது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் பொன்நகர் அருகே நினைவு ஸ்தூபி உள்ளது. கரூர் கோட்டையை கைப்பற்ற திப்பு சுல்தான் படையினர் ஆங்கிலேயர்களுடன் போரிட்டதை நினைவு கூறும் வகையில் இந்த இடத்தில் நினைவு ஸ்தூபி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பழுதடைந்த...
விவசாயிகள் குறைதீர் கூட்டம்
கரூர், ஆக. 27: கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:கரூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 11மணியளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.கரூர் மாவட்ட த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் விவசாயிகள் குறைதீர்க்கும்...
கிருஷ்ணராயபுரம் அருகே புதிய பாலப்பணியை விரைந்து முடிக்கவேண்டும்
கிருஷ்ணராயபுரம், ஆக. 22: கிருஷ்ணராயபுரம் அருகே லாலாபேட்டையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே சிந்தலவாடி ஊராட்சி லாலாபேட்டை பகுதியில் கள்ளபள்ளி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் குறுக்கே புதிதாக பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இவ்வழியாக மகிளிப்பட்டி, புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி ஊருக்கு...