என்.ஐ கலை அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் மன்ற தொடக்க விழா

தக்கலை, ஆக.30 : குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரியில் முத்தமிழ் மன்ற துவக்க விழா நிகழ்வு நடைபெற்றது. மாணவி ஆஸ்மி வரவேற்றார். மாணவி ராம் வித்யா ராஜ் அறிமுகயுரை நிகழ்த்தினார். கல்லூரி முதல்வர் இரா.மாரிமுத்து சிறப்புரை ஆற்றினார். தொடர்ந்து மன்ற நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். முத்தமிழ் மன்ற தலைவராக மாணவி நந்தினி, துணைத்தலைவராக...

களியக்காவிளையில் வீட்டில் புகுந்து பெண்ணிடம் நகை பறித்தவர் கைது

மார்த்தாண்டம், ஆக. 30: களியக்காவிளை ஒற்றபனைவிளையை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி ஜா. இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது, பின்பக்க கதவு வழியாக காரக்கோணம் புல்லன்தேரி பகுதியை சேர்ந்த சிமிகுட்டன் (39) என்பவர், வீட்டிற்குள் புகுந்து ஜாவின் கழுத்தில் கிடந்த 2 1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து களியக்காவிளை...

மலப்புரம் அருகே பாஜ பெண் பிரமுகரை பலாத்காரம் செய்ய முயற்சி யூ டியூபர் கைது

திருவனந்தபுரம், ஆக.30: கேரள மாநிலம் மலப்புரம் அருகே வீடு புகுந்து பாஜ பெண் பிரமுகரை பலாத்காரம் செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூர் பகுதியில் 40 வயதான பாஜ பெண் பிரமுகர் வசித்து வருகிறார். அவருக்கு 16 வயதில் மகள் உண்டு. கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால்...

பேயை விரட்டவில்லை எனக்கூறி கோயில் பூசாரி மீது சரமாரி தாக்குதல் பாலக்காடு அருகே பரபரப்பு

திருவனந்தபுரம், ஆக. 27: கேரள மாநிலம் பாலக்காடு அருகே பூஜை நடத்தியும் பெண்ணுக்கு பிடித்த போய் போகவில்லை என்று கூறி கோயில் பூசாரியை உறவினர்கள் சரமாரியாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் காயமடைந்த பூசாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சிற்றிலஞ்சேரி அருகே இரட்டக்குளம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன்(54). இவரது உறவினரான ஒரு...

குலசேகரத்தில் நாளை வருங்கால வைப்புநிதி குறைதீர்ப்பு கூட்டம்

நாகர்கோவில், ஆக. 27: நாகர்கோவில் வருங்கால வைப்புநிதி ஆணையாளர் சுப்பிரமணி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகர்கோவில் வருங்கால வைப்புநிதி நிறுவனம், நாகர்கோவில் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் இணைந்து நடத்தும் வைப்பு நிதி உங்கள் அருகில் என்ற குறைதீர்ப்பு முகாம் நாளை(28ம் தேதி) குலசேகரம் கூடைத்தூக்கியில் உள்ள எஸ்ஆர்கே இன்டர்நேஷனல் பள்ளியில் நடக்கிறது.முகாம் காலை...

பத்தனம்திட்டா அருகே மூதாட்டி உடலை தகனம் செய்ய முயன்றபோது தீயில் கருகிய பேரன்கள்

திருவனந்தபுரம், ஆக.27: கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் ரான்னி அருகே இளம்பிலாசேரி பகுதியைச் சேர்ந்தவர் ஜானகி(80). இவர் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் மரணமடைந்தார். அவரது உடல் அருகில் உள்ள ஜண்டாயிக்கல் எரிவாயு மயானத்தில் தகனம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. உடல் மயானத்தில் வைக்கப்பட்ட பின்னர் ஜானகியின் பேரன் ஜிஜோ (41) உடலுக்கு அருகே சிரட்டையில் கற்பூரம் வைத்து...

மார்த்தாண்டம் பஸ் நிலையத்தை அழகுபடுத்த சுவர்களில் வண்ண படங்கள் நகராட்சி தலைவர் ஆய்வு

மார்த்தாண்டம், ஆக. 22: மார்த்தாண்டம் பஸ் நிலையத்தை அழகுபடுத்தும் விதமாக வரையப்பட்ட வண்ண படங்களை குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசைத்தம்பி, ஆணையாளர் ராஜேஸ்வரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். மார்த்தாண்டம் பஸ் நிலைய சுவர்கள் மற்றும் பில்லர்களில் போஸ்டர்கள் அதிகமாக ஒட்டப்பட்டு வந்தது.இது நாட்கள் செல்ல செல்ல சுவரே தெரியாமல் நோட்டீஸ் மயமாக மாறியது. இதனால்...

பூதப்பாண்டியில் ஜீவானந்தம் சிலைக்கு மாலை அணிவிப்பு

பூதப்பாண்டி, ஆக. 22: பூதப்பாண்டியில் நேற்று பொதுவுடமை போராளி பா.ஜீவானந்தத்தின் 119வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் வ.உ.சி பேரவை தலைவர் செந்தில்குமார், விஷ்வ இந்து பரிஷத் மாநில பொறுப்பாளர் காளியப்பன் ஆகியோர் தலைமையில் அங்குள்ள ஜீவானந்தம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தோவாளை மேற்கு ஒன்றிய பாஜ தலைவர் வழக்கறிஞர் கோலப்பன்,...

மார்த்தாண்டம் அருகே கார் மோதி பேரூராட்சி ஊழியர் படுகாயம்

மார்த்தாண்டம், ஆக. 22: திங்கள்சந்தை அருகே நெய்யூர் மேலமாங்குழி பகுதியை சேர்ந்தவர் தங்கப்பன். இவரது மகன் விவேக் (39). இவர் கோதநல்லூர் பேரூராட்சியில் முதல்நிலை இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று விவேக் பைக்கில் மார்த்தாண்டம் அருகே காஞ்சிரங்கோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு எதிரே வேகமாக வந்த கார் ஒன்று, விவேக்...

நித்திரவிளை கிறிஸ்துராஜபுரம் ஜெயமாதா மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தினவிழா

நித்திரவிளை, ஆக.20 : நித்திரவிளை கிறிஸ்துராஜபுரத்தில் அமைந்துள்ள ஜெயமாதா மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் டோஸ்ட் மாஸ்டர்கள் இன்டர்நேஷ்னல் கிளப்பின் திருவனந்தபுரம் மைத்ரீயின் துணை தலைவர் பெபின் ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவியரின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை வழங்கினார். இந்த...