காஞ்சிபுரத்தில் 770 படுக்கை வசதிகளுடன் ரூ.324 கோடி மதிப்பில் புற்றுநோய் மருத்துவமனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

குன்றத்தூர், டிச. 7: காஞ்சிபுரத்தில் ரூ.324 கோடி மதிப்பீட்டில் 770 படுக்கை வசதிகளுடன் பெரிய புற்றுநோய் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் அய்யப்பன்தாங்கல் ஊராட்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ‘நலன் காக்கும் ஸ்டாலின்’ சிறப்புத் திட்ட மருத்துவ முகாம் நேற்று தனியார் பள்ளி...

போலி ஆவணங்கள் தயாரித்து தமிழகத்தில் வசித்த இலங்கை ஆசாமி கைது

துரைப்பாக்கம், டிச. 7: இலங்கையை சேர்ந்த ஒருவர், சட்ட விரோதமாக, கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் குப்பம் பகுதியில் வசித்து வருவதாக நீலாங்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் மேற்கண்ட பகுதியில் விசாரணை நடத்தி, இலங்கையை சேர்ந்த மல்லிகா ராகி ராஜேஸ்வரன் (53) என்பவரை நேற்று பிடித்து விசாரணை நடத்தினர். அதில், கடந்த 39...

மெட்ரோ பணியின்போது ராட்சத கிரேன் பழுதால் போக்குவரத்து பாதிப்பு

ஆலந்தூர், டிச.7: மாதவரம் - சிறுசேரி வழித்தட மெட்ரோ ரயில் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதற்காக, கீழ்கட்டளை பகுதியில் மடிப்பாக்கம் - மேடவாக்கம் சாலையில் தூண்கள் அமைக்கப்பட்டு, அதன்மீது கர்டர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கீழ்கட்டளை பஸ் நிறுத்தம் அருகே, நேற்று ராட்சத கிரேன் முலம் தளவாட பொருட்களை மேம்பாலத்தின் மீது...

டிட்வா புயல் மழை காரணமாக நீரில் மூழ்கிய பயிர்களை பாதுகாப்பது எப்படி? காஞ்சிபுரம் கலெக்டர் அறிவுரை

காஞ்சிபுரம், டிச.6: காஞ்சி புரம் மாவட்டத்தில் டிட்வா புயல் மழை காரணமாக நீரில் மூழ்கிய பயிர்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: வடகிழக்கு பருவமழை காலத்தில் தற்போது டிட்வா புயல் காரணமாக பெய்த கனமழையால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள சுமார்...

10ம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாமல் மருத்துவமனை நடத்திய போலி டாக்டர் கைது

சோழிங்கநல்லூர், டிச.6: பத்தாம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாமல், அண்ணாநகரில் கடந்த 2 வருடங்களாக ஆயுர்வேத மருத்துவனை நடத்தி வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். அவர் நடத்தி வந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. பெரம்பூரை சேர்ந்தவர் வெங்கடேசன் (42). இவர், அண்ணாநகர் 2வது மெயின் ரோட்டில் கடந்த 2 வருடங்களாக ஆயுர்வேத மருத்துவமனை...

கால்வாய்கள் தூர்வாரி சீரமைப்பு நிரம்பி வழியும் கொண்டங்கி ஏரி: அரசுக்கு, விவசாயிகள் பாராட்டு

திருப்போரூர், டிச.6: திருப்போரூர் ஒன்றியத்தில் கால்வாய்கள் தூர்வாரி சீரமைக்கப்பட்டதால், தற்போது பெய்த மழையின் காரணமாக கொண்டங்கி ஏரி நிரம்பி வழிவதால், அரசின் நடவடிக்கைக்கு, விவசாயிகள் பாராட்டி உள்ளனர். திருப்போரூர் ஒன்றியத்தில் தையூர், கொண்டங்கி, சிறுதாவூர், மானாம்பதி ஆகிய கிராமங்களில் பெரிய ஏரிகள் உள்ளன. கடந்த 1 வாரமாக பெய்த கனமழையின் காரணமாக, அனைத்து ஏரிகளும் நிரம்பி...

தும்பவனம் கால்வாய் பகுதியில் சாலையோர தடுப்புகள் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் வேண்டுகோள்

காஞ்சிபுரம்,டிச.5: காஞ்சிபுரம் அடுத்த திருப்பருத்திகுன்றம் பகுதியில் இருந்து தும்பவனம் கால்வாய் தொடங்குகிறது. ராகவேந்திரா நகர், போஸ்டல் காலனி, அரசு ஊழியர்கள் குடியிருப்பு பகுதி வழியாக வந்தவாசி சாலையின் குறுக்கே அமைக்கப்பட்ட சிறு பாலம் வழியாக வேகவதி ஆற்றில் மழைநீர் கலக்கும் வகையில், இந்த கால்வாய் அமைந்துள்ளது. திருப்பருத்திக்குன்றம், கலெக்டர் அலுவலகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்யும்...

அரசுப்பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சேதம்

செங்கல்பட்டு, டிச.5: செங்கல்பட்டு அடுத்த அஞ்சூரில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு பெய்த கனமழையின் காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் சுமார் 30 அடி தூரத்திற்கு இடிந்து கீழே விழுந்தது. சுவர் இடிந்து...

கூடுவாஞ்சேரி கீரப்பாக்கம் ஊராட்சியில் சலசலப்பு உடைந்த பைப் லைன்களை மாற்ற அதிகாரிகள் மறுப்பு

கூடுவாஞ்சேரி, டிச.5: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் அடங்கிய கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சியில், கீரப்பாக்கம், முருகமங்கலம், அருங்கால், ஹவுசிங் போர்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதில் ஊராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு பகுதியில் உள்ள குடிநீர் கிணற்றில் ஓட்டை விழுந்துள்ளதால் மழைக்காலங்களில் தண்ணீர் கலங்கி விடுகிறது. இதனை...

தொடர் நீர்வரத்து காரணமாக அருவிபோல் காட்சியளிக்கும் தையூர் ஏரி: பொதுமக்கள் குளியல் போட்டு ஆட்டம்

திருப்போரூர், டிச.4: செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, தையூர் ஏரியில் நீர் நிரம்பி வழிந்து அருவிபோல் கொட்டுவதால் பொதுமக்கள் உற்சாக குளியல் போடுகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், பொன் விளைந்த களத்தூர் ஆகிய ஏரிகளுக்கு அடுத்து தையூர் ஏரி மூன்றாவது பெரிய ஏரியாக விளங்குகிறது. சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளை...