பணம் கேட்டு வாலிபரை தாக்கியவர் கைது
ஈரோடு, ஆக. 30: ஈரோடு நேதாஜி சாலை முனிசிபல் சத்திரத்தை சேர்ந்த பழனிச்சாமி மகன் ஜீவரத்தினம் (28). தொழிலாளி. இவர் கடந்த 27ம் தேதி இரவு அவரது அண்ணனுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (25), பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர்,...
பதிவு தபால் சேவையை ரத்து செய்வதை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம்
ஈரோடு, ஆக. 30: ஓய்வூதியர்களின் அகில இந்திய கூட்டமைப்பு, மத்திய அரசு ஊழியர் இணைப்புக்குழு ஆகியன சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு தலைமை தபால் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஓய்வூதியர்களின் அகில இந்திய கூட்டமைப்பு மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். கன்வீனர் ராமசாமி முன்னிலை வகித்தார். இதில், தபால் துறையில்...
ரூ.4.3 கோடிக்கு கொப்பரை ஏலம்
ஈரோடு, ஆக.29: பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.4 கோடியே 3 லட்சத்துக்கு நேற்று முன்தினம் கொப்பரை விற்பனை நடைபெற்றது. பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கத்தில் வாரந்தோறும் சனி மற்றும் புதன் கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்துக்கு மொத்தம் 4,267 மூட்டை கொப்பரைகள்...
ஈரோட்டில் பைக் திருட்டு
ஈரோடு, ஆக.29: ஈரோடு ரங்கம்பாளையம் சீனிவாச ராவ் வீதியை சேர்ந்த செல்வராஜ் மகன் யுவராஜ் (39). இவர், கடந்த 5ம் தேதி ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள ஷாப்பிங் மால் முன்புறம் தனது பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்தபோது, யுவராஜ் பைக் மாயமாகி இருந்தது. அக்கம்பக்கம் மற்றும் பல்வேறு இடங்களில்...
பெருந்துறையில் அதிமுக-பாஜவை சேர்ந்த மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்
ஈரோடு, ஆக.29: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில், பெருந்துறை நகர பாஜவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அருணா சிவபிரகாஷ் தலைமையில் நகர துணை தலைவர் பாண்டியன், கலை மற்றும் கலாசார அணி நகர துணை தலைவர்...
தறிப்பட்டறை தொழிலாளி தற்கொலை
ஈரோடு, ஆக. 27: ஈரோடு பெரியசேமூரைச் சேர்ந்தவர் மகேந்திரன் (46). தறிப்பட்டறை தொழிலாளியான அவருக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் சரிவர வேலைக்கு போகாமல், கடன் வாங்கி மது அருந்தி வந்துள்ளார். உறவினர்கள் அறிவுரை கூறியும், மகேந்திரன் கேட்கவில்லை. இந்நிலையில், கடந்த 20ம் தேதி மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி, தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட உறவினர்கள்,...
சாலை விபத்தில் ஏடிஎஸ்பி ஜீப் டிரைவர் படுகாயம்
ஈரோடு, ஆக.27: ஈரோடு அருகே சாலை விபத்தில் ஏடிஎஸ்பி ஜீப் டிரைவர் படுகாயம் அடைந்தார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை துடுப்பதி சுள்ளிபாளையத்தை சேர்ந்த வேலுமணி மகன் சஞ்சீவ் (32). ஆயுதப்படை போலீஸ். ஈரோடு மாவட்ட போலீஸ் ஏடிஎஸ்பி ஜீப் டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த 23ம் தேதி இரவு பணி முடிந்து, சங்சீவ், வீட்டுக்கு பைக்கில்...
வருங்கால வைப்பு நிதி குறைதீர் கூட்டம்
ஈரோடு, ஆக.27: ஈரோடு மாவட்டம் சென்னிமலை பிஆர்எஸ் சாலை அர்த்தநாரிபாளையத்தில் உள்ள சென்னிமலை இண்ட் நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை லிமிடெட் ஆடிட்டோரியத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மற்றும் இஎஸ்ஐசியும் இணைந்து ‘நிதி ஆப்கே நிகட்’ (பிஎப் உங்கள் அருகில்) என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் குறைதீர் கூட்டம்...
அதிகளவில் மது குடித்த தூய்மைபணியாளர் பலி
ஈரோடு, ஆக. 23: ஈரோடு நேதாஜி சாலை முனிசிபல் சத்திரத்தை சேர்ந்தவர் சேகர் (60). இவர், மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சேகருக்கு மதுப்பழக்கம் உள்ளது. கடந்த 20ம் தேதி மாலை சேகர், ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள தம்பிக்கலைஐயன் கோவில் பகுதியில் அதிக மதுபோதையில் மயங்கி கிடப்பதாக தகவல் வந்தது. இதன்பேரில்,...