ஒட்டன்சத்திரத்தில் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

ஒட்டன்சத்திரம், ஆக. 29: ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் நெகிழி பை ஒழிப்பு மற்றும் சுற்றுப்புற சூழல் மாசுபாடு திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடந்து. கல்லூரி தாளாளர் வேம்பணன், கல்லூரி முதல்வர் தேன்மொழி தலைமை வகித்தனர். தொடர்ந்து மாணவிகள் பேரணியாக சென்றனர்....

திண்டுக்கல் அருகே தொழிலாளி தற்கொலை

திண்டுக்கல், ஆக. 29: திண்டுக்கல் வேடப்பட்டி ஞான நந்தகிரி நகரை சேர்ந்தவர் மோகன் (35). கூலித்தொழிலாளி. இவரது மனைவி காளீஸ்வரி. 2 பிள்ளைகள் உள்ளனர். மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாகவும், இதனால் அவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன், மனைவியிடையே அடிக்கடி...

செந்துறை பகுதியில் இன்று மின்தடை ரத்து

நத்தம், ஆக. 29: நத்தம் அருகே செந்துறை துணை மின் நிலையத்தில் இன்று (ஆக.29ம் தேதி, வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செந்துறை, மாதவநாயக்கன்பட்டி, மாமரத்துப்பட்டி, களத்துப்பட்டி, கருத்தநாயக்கன்பட்டி, மணக்காட்டுர், மங்களப்பட்டி, குடகிப்பட்டி, கோசுகுறிச்சி, பிள்ளையார்நத்தம் கோட்டைப்பட்டி ஆகிய ஊர்களில் மின் விநியோகம்...

கொடைக்கானலில் ஆவணங்களின்றி இயங்கிய 3 வாகனங்களுக்கு அபராதம்

கொடைக்கானல், ஆக. 27: கொடைக்கானல் பகுதியில் ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 3 வாகனங்களுக்கு அபராதம் விதித்து பறிமுதல் செய்தனர். கொடைக்கானல் ஏரி சாலை பகுதியில் வத்தலக்குண்டு வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ தலைமையில் நேற்று திடீர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த வாகனங்களில் வாகன உரிம பதிவு, எப்சி புதுப்பிப்பு, இன்சூரன்ஸ் உள்ளிட்ட சோதனைகள்...

சூதாடிய 4 பேர் கைது

வேடசந்தூர், ஆக. 27: அய்யலூர் அருகேயுள்ள தீத்தாகிழவனூர் பகுதியில் வடமதுரை காவல் நிலைய எஸ்ஐ பாண்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அக்காகுளம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்ட போது, சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட மூக்கர பிள்ளையார் கோயில் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (25), வேங்கனூரை...

பழநியில் கல்லூரி மாணவிகளுக்கு யோகா, தியான பயிற்சி

பழநி, ஆக. 27: பழநி அருகே சின்னக்கலையம்புத்தூர் பழனியாண்டவர் மகளிர் கலை கல்லூரியில் 3ம் ஆண்டு மாணவிகளுக்கு மதிப்பு கல்வி பாடத்திட்டத்தின் பிரிவில் யோகா, தியானம், காயகல்ப பயிற்சி அளிக்கப்பட்டது. கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். பழநி அறிவு திருக்கோயில் மனவள கலை ஆன்மீக மன்ற ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். இம்முகாமில் யோகா...

வத்தலக்குண்டு அருகே குட்கா விற்ற 2 பெண்கள் கைது

வத்தலக்குண்டு, ஆக. 23: வத்தலக்குண்டு அருகே குட்கா- புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்களை போலீசார் கைது செய்தனர். வத்தலக்குண்டு அருகே ஜி.தும்மலப்பட்டியில் பெட்டி கடை வைத்திருப்பவர் மல்லிகா (60). இவர் கடையில் குட்கா- புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கவுதம், எஸ்ஐ சேக் அப்துல்லா மற்றும்...

மாநில பிக்கில் பால் போட்டி வெற்றி திண்டுக்கல் வீரர்களுக்கு பாராட்டு

திண்டுக்கல், ஆக. 23: திருநெல்வேலி மாவட்டத்தில் மாநில அளவிலான பிக்கில் பால் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் 19 வயது தனிநபர் பிரிவில் பிரகாஷ் இரண்டாம் இடமும், 16 வயது மாணவிகளுக்கான இரட்டையர் பிரிவில் யாழினி, பூஜா இரண்டாம் இடம் பிடித்தனர். வெற்றி...

நத்தம் பகுதியில் ஆக.25ல் மின்தடை

நத்தம், ஆக. 23: நத்தம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (ஆக.25ம் தேதி, திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நத்தம் நகர், அய்யாபட்டி, கோவில்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி, மூங்கில்பட்டி, ஊராளிபட்டி, சேத்தூர், அரவங்குறிச்சி, சமுத்திராப்பட்டி, கோட்டையூர், சிறுகுடி, பூதகுடி,...

விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி முகாம்

நிலக்கோட்டை, ஆக. 22: சின்னாளபட்டி அருகே உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் வேளாண் அறிவியல் மையத்தின் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக உணவு பாதுகாப்பு துறை சார்பிலும், கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண்பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள உணவுப்பதப்படுத்துதல் பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கான 2 நாள் தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடந்தது....