பாதுகாப்பு கேட்டு காதல்ஜோடி போலீசில் தஞ்சம்

கோவை, செப். 10: கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திண்டுக்கல் வடமதுரையை சேர்ந்த ஹரிணி என்பவர் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நானும், திண்டுக்கல்லை சேர்ந்த முருகேசன்-பச்சையம்மாள் தம்பதி மகன் ருபேஸ்குமார் என்பவரும் காதலித்து வந்தோம். நேற்று முன்தினம் கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் பதிவு திருமணம் செய்து...

கூடலூர் நகராட்சியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்

பெ.நா.பாளையம், செப்.10: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கூடலூர் நகராட்சியில் தார் சாலை சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. 13-வது வார்டு ரேஷன் கடை வீதியில் பழுதடைந்த சாலையை தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் புதிய தார் சாலையாக புதுப்பிக்கும் பணி ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற உள்ளது. நேற்று நடைபெற்ற பூமி பூஜையில்...

மாநகராட்சி திட்டங்களை கேட்டறிந்த ஜெர்மனி மாணவர்கள்

கோவை, செப். 10: கோவை மாநகராட்சி அலுவலகத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த மாணவர்கள் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனை நேற்று நேரில் சந்தித்து மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தனர். கோவை தனியார் நிறுவனம் ஜெர்மனியை சேர்ந்த மாணவர்களை 2025ம் ஆண்டுக்கான இந்திய வெளிநாட்டுப் படிப்பு திட்டத்தை அறிய ஏற்பாடு செய்துள்ளது. இதில் இந்தியாவின் கலாசாரம்,...

மாநகராட்சி குறை தீர்க்கும் கூட்டம் இன்று ரத்து

கோவை, செப். 9: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும். மாநகராட்சி மேயர் ரங்கநாயகி தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், பொதுமக்கள் தங்களது பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து மனு அளிக்கின்றனர். இதேபோல், இன்று மாநகராட்சி அலுவலகத்தில்...

பஸ்சில் பயணியிடம் செல்போன் திருட்டு

கோவை, செப். 9: கோவை சாய்பாபா காலனி விசிகேஎன் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவர், நேற்று முன்தினம் காலை காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு தனியார் பஸ்சில் சென்று கொண்டு இருந்தார். ரயில் நிலையம் அருகே பஸ் வந்த போது அவரது அருகில் இருந்த வாலிபர் ஒருவர் மணிகண்டன்...

கஞ்சாவுடன் மேற்கு வங்க வாலிபர் கைது

கோவை, செப். 9: கோவை காட்டூர் போலீசார் காந்திபுரம் பஸ் நிலையம் அருகே ரோந்து சென்று கண்காணித்து கொண்டு இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் போலீசார் அவரை சோதனை செய்தனர். அதில் அவரிடம் கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து...

வரும் 5ம் ேததி டாஸ்மாக் கடைகளுக்கு லீவு

கோவை, செப்.3: கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள், பார்கள், பொழுதுபோக்கு மனமகிழ்மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டல், சுற்றுலாத்துறை மூலமாக நடத்தப்படும் மதுக்கூடங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை உள்ளிட்ட அனைத்து உரிமம் பெற்ற மது விற்பனை நிலையங்கள் வரும் 5ம்...

மசக்காளிபாளையம் ரேஷன் கடையில் அரிசி திருட்டு அதிகாரிகள் விசாரணை

கோவை, செப். 3: கோவை ஹோப்காலேஜ் அடுத்த மசக்காளிபாளையம் விஸ்வநாதன் லேஅவுட்டில், சிங்காநல்லூர் கூட்டுறவு பண்டக சாலைக்கு உட்பட்ட ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இந்த ரேஷன் கடையில் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்களில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று கடையின் முன்பு இருசக்கர வாகனத்தில் வெள்ளை நிற சாக்கு மூட்டையில்...

அமைகிறது புதிய ரவுண்டனா தமிழக அரசின் நல்லாசிரியர் விருதுக்கு கோவை மாவட்டத்தில் 13 ஆசிரியர்கள் தேர்வு

கோவை, செப்.3: முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மத்திய, மாநில அரசுகள் சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அதன்படி, தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறையின் சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் சிறப்பாக பணிபுரிந்த...

காந்திபுரம், மைலேறிபாளையம் பகுதிக்கு நகர பேருந்தை மீண்டும் இயக்க மக்கள் கோரிக்கை

மதுக்கரை, செப்.2: தமிழகத்தில் 1971 ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது, பொதுமக்களின் வசதிக்காக, கோவை காந்திபுரத்தில் இருந்து, 73 பி. என்கிற எண் கொண்ட, டவுன் பஸ், ரயில்நிலையம், உக்கடம், ஆத்துப்பாலம், சுந்தராபுரம், போத்தனூர், செட்டிபாளையம், ஒக்கிலிபாளையம் வழியாக மைலேறிபாளையதிற்கு டவுன் பஸ் இயக்கப்பட்டது. தினமும் காலை 6.30, 10.30, மதியம் 2 மணி,...